காத்தான்குடி ஊர் வீதிகளுக்கும் சிப்லி பாறூக் அவர்களுக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது- ஹிஸ்புள்ளா

ஹம்ஸா கலீல்-

காத்தான்குடி ஊர் வீதி அபிவிருத்திப் பணிகளுக்கும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் அவர்களுக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது. சிப்லி பாறூக் அவர்களின் ஊர் வீதி அபிவிருத்தி தொடர்பான கருத்துக்கு தனது முழுமையான மறுப்பினை தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,
காத்தான்குடி ஊர் வீதி முழுக்க முழுக்க என்னுடைய முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்திப் பணியாகும். இவ் அபிவிருத்திப் பணிகளின் போது ஏற்பட்ட சில கொந்தராத்து பிரச்சினைகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. நாடு முழுவதுமுள்ள கொந்தராத்து நிறுவனங்களுக்கு வீதி அபிவிருத்தி அமைச்சின் கொடுப்பனவுகளில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக நாடு முழுவதும் நடைபெற்ற வீதி அபிவிருத்தி பணிகள் இடை நிறுத்தப்பட்ட சூழ்நிலையிலேயே காத்தான்குடி ஊர் வீதி அபிவிருத்தி பணிகளையும் பொறுப்பேற்றிருந்த கொந்தராத்துக்காரர் பணிகளை இடை நிறுத்தி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து நான் அவசரமாக மட்டக்களப்பு C.A ஊடாக தொடர்பு கொண்டு கடிதங்களைப் பெற்று வீதி அபிவிருத்தி அதிகார சபையினுடைய தலைவர் மற்றும் அதற்கு பொறுப்பான பணிப்பாளர் அவர்களை தொடர்பு கொண்டு மிகுதி வீதி வேலைகளையும் மற்றும் காபட் இடுகின்ற வேலைகளையும் வீதி அபிவிருத்தி அதிகார சபையும், வடிகான் கட்டுகின்ற வேலைகளை ஏற்கனவே வடிகான் வேலைகளைச் செய்த சகோதரர் ரஹ்மதுல்லாஹ் ஊடாக செய்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் வடிகான் வேலை தவிர்ந்த சகல வீதி வேலைகளையும் முழுக்க முழுக்க எந்த கொந்தராத்துக் காரர்களுக்கும் கொடுக்காமல் வீதி அபிவிருத்தி அதிகார சபை நேரடியாக செய்ய வேண்டும் என்று நான் அறிவுறுத்தி இருந்தேன். அதனடிப்படையில் மாத்திரமே தற்போது வீதி வேலைகள் நடை பெறுகிறது.

இவ் அபிவிருத்திப் பணிகளுடன் எவ்வித சம்பந்தமும் இல்லாத மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் அவர்கள் இவ் அபிவிருத்தி பணிகள் நடைபெறும் இடங்களுக்குச் சென்று இவ் அபிவிருத்தி பணிகளுக்கு உரிமை கோருவதையும், ஊடகங்களினூடாக கருத்துத் தெரிவிக்கும் செயலையும் எண்ணி நான் கவலை அடைகின்றேன்.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேலும் கூறுகையில்,
மஞ்சந்தொடுவாய் ஆயுர் வேத வைத்தியசாலை முழுக்க முழுக்க எனது நிதி ஒதுக்கீட்டினால் கட்டப்பட்ட வைத்தியசாலை.
அதில் போடப்பட்டிருந்த கட்டில்கள் உற்பட அனைத்துமே நான் கொடுத்திருந்த உபகரணங்கள். இது ஏற்கனவே இருந்த வைத்தியரின் நடைமுறை சிக்கல்கள் காரணமாக தடைப்பட்டிருந்தது. அது தற்போது எவ்வித அறிவித்தலும் இன்றி மீண்டும் வேறு சிலரால் திறக்கப்பட்டிருக்கிறது.

மேலும் காத்தான்குடியில் யூனானி வைத்தியசாலை அமைப்பதற்கு திட்டமிட்டு இவ் வைத்தியசாலைக்கான காணி அடையாளம் காணப்பட்டு பாரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பெரிய ஆராய்ச்சி யூனானி வைத்திய நிலையமாக கட்டுவதற்கு நாம் தீர்மானித்து நிதி ஒதுக்கீட்டை செய்து இருந்தோம்.

காணித்தாமதம் காரணமாகவே வைத்தியசாலை கட்டுமான வேலைகளை தொடங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது.

பின்னர் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளத்தை அழைத்து பேச்சுவார்த்தைகள் நடாத்தி இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தேன். என்னுடன் பல பேச்சுவார்த்தைகளை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளம் நடாத்தியதன் அடிப்படையில் தான் இறுதியாக சம்மேளனம், வயோதிபர் இல்லத்திடம் இருந்து காணியை பெற்றுக் கொண்டது. அதன் அடிப்படையிலே தான் இந்த வைத்தியசாலை கட்டுமான வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -