க.கிஷாந்தன்-
28.03.2017 அன்று வெளியிடப்பட்டுள்ள கா.பொ.த சாதாரண தரபரீட்சை பெறுபேறுகளின படி கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்கள்.
அந்தவகையில் பாடசாலையின் மாணவி பரசுராம் மதுரா 9 ஏ சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெறுமை சேர்த்துள்ளார். இவர் பரசுராம் சுபத்ரா தம்பதிகளின் புதல்வியாவார்.
பாடசாலையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ள மாணவ, மாணவிகளின் வெற்றிகளுக்காக உழைத்திருக்கின்ற பாடசாலை ஆசிரியர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கியுள்ள பெற்றோர்களுக்கும் பாடசாலை அதிபர் ஆர்.சிவலிங்கம் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.