யு.எல்.எம்.றியாஸ்-
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சம்மாந்துறை, காரைதீவு நிந்தவூர் பிரதேசங்களில் உள்ள 96 கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த சிவில் பாதுகாப்புக் குழுக்களின் பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் பொதுமக்களின் பாதுகாப்பு, சமூக ரீதியான பிணக்குகள் மற்றும் போதைப்பொருள் பாவனை நடவடிக்கைகளை முற்றாக ஒழிக்கும் வகையில் இக் குழுக்களின் ஒத்துழைப்புடன் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
இது தொடர்பாக சிவில் பாதுகாப்புக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு தெளிவூட்டும் வகையில் பொலிஸ் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்படட விசேட செயலமர்வு ஒன்று சம்மாந்துறை எம்.ஏ.அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் வெத்தசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு விளக்கங்களை வழங்கினார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சமூக பொலிஸ் இணைப்பதிகாரி பொலிஸ் அத்தியாட்சகர் கே.அரசரட்ணம், சர்வ சமய பெரியார்கள் புத்திஜீவிகள் உள்ளிடட பலர் கலந்து கொண்டனர்.