கிண்ணியா தளவைத்தியசாலையை தரமுயர்த்தக்கோரி இன்றும் (29) இரண்டாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு திருகோணமலை கிண்ணியா பழைய வைத்தியசாலைக்கு முன்னாள் இடம்பெற்றது.இதில் சமூக ஆர்வலர்கள் பலர் சுலொகங்களை ஏந்தி கிண்ணியா வைத்தியசாலையின் தரமுயர்வு தொடர்பாக பல கோஷங்களை எழுப்பினர் இதன்போது சட்டத்தரணிகள் வைத்தியர்களும் பங்கேற்று போராட்டங்களில் மக்களுடன் சேர்ந்து தரமுயர்வுக்கான நடவடிக்கைகளில் அதிக ஈடுபாடு காட்டினிர்கள் விசேடமாக திருகோணமலை சிரேஷ்ட சட்டத்தரணி ஜெகதோதியும் அவரது பாரியார் உட்பட வைத்தியர்கள் என பலரும் பங்கேற்றனர்.
அண்மைய டெங்கு நோயின் உயிரிழப்புக்களுக்கும் வைத்தியசாலை பற்றாக்குறையை நிவர்த்திக்கக்கோரியும் மத்திய அரசிடம் ஒப்படைத்தல் போன்ற பல கோரிக்கைகள் மூலமாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.