காணாமல் போனவர்களுக்கு தீர்வு வேண்டும் :சுதந்திர பெண்கள் அமைப்பு

ஹஸ்பர் ஏ ஹலீம்-

கையளிக்கபட்டு காணாமல் ஆக்கபட்டவர்களின் நிலை தொடர்பான நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் பாராமுகமாக இருக்க முடியாது என சுகந்திர பெண்கள் அமைப்பு இன்று 29ம் திகதி கேள்வி எழுப்பியது.

கையளிக்கப்பட்டு கடத்தப்ட்டு காணமால் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் சுழற்சி முறையிலான நீதி கோரிய போராட்டம் இன்றுடன் 25வது நாளை எட்டியுள்ளது.

திருகோணமலை ஆளுனர் அலுவலகத்திற்கு முன் இடம் பெருகின்ற இந்த போராட்டத்திற்கு காலி மாத்தறை மொனராககல போன்ற மாவட்டங்களில் இருந்து பெரும்பான்மையின் சமூகத்தை சேர்ந்த பெண்கள் பங்கேற்று தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இதன் போதே ஊடகங்களக்கு இக் கருத்தை அவர்கள் முன் வைத்தனர்.

தொடர்ந்து இவ் அமைப்பினர் கருத்து தெரிவிக்கும் பொது நாம் தொடரந்து வடகிழக்கில் உள்ள மக்களின் பிரச்சினைகளான காணி உரிமை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருடைய உரிமைகள் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து அவர்களின் போராட்டங்களிலும் கலந்து கொண்டு வருகின்றோம்.

இலங்கையில் உள்ள சகல பெண்களும் தமது உரிமையை பெற்று வாழ வேண்டும் இந்த அடிப்படையில் ஒரு மாதத்தை அண்மித்திருக்கும் திருகோணமலையில் உள்ள காணாமல் போன உறவுகளின் இப் போராட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு எமது ஆதரவை அவர்களுக்கு வழங்குகின்றோம் அவர்களுக்கான தீர்வை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என சுகந்திர பெண்கள் அமைப்பு தமது கருத்தை ஊடகங்களுக்குதெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -