மு.இராமச்சந்திரன்-
மஸ்கெலியா மற்றும் நல்லத்தன்னி பகுதிகளிலுள்ள வர்த்த நிலையங்கள் சுகாதார பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனைக்குற்படுதியதில் 10 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவனொளிபாதமலை பருவகாலத்தை முன்னிட்டு வருகை தரும் யாத்திரிகைளின் நலன் கருதி 11.03.2017 திடீர்சேதணைகள் மேற்கொண்டதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இருவேறு குழுக்கலாக மஸ்கெலியா நகர் மற்றும் நல்லத்தன்னி பகுதிகளீலும் உணவகங்கள். பேக்கரிகள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை நிலையங்களும் சோதணைக்குற்படுத்தப்பட்டது காலவதியாக பொருட்கள். பழுதடைந்த. பொருட்கள் என பல்வேறு குறைபாடுகளுடைய 10 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட சுகாதார பரிசோதகர்களும் மஸ்கெலியா பிரதேச சுகாதார பரிசோதகர்களுமே தீடீர் சோதணையில் ஈடுபட்டர் சிவனொளி பதமலை பருவகாலத்தை முன்னிட்டு தொடர்ந்து இவ்வாறான சோதணைகள் இடம்பெறும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.