கட்சிவேறு, தலைவர் வேறு என்று கூறவருகின்றாரா ஹசனலி..?

முன்னால் மு.காங்கிரஸின் செயளாலர் நாயகம் ஹசன் அலி அவர்கள், அண்மைக்காலங்களாக மு.காங்கிரஸின் தலைவர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருவதை அவதானித்து வருகின்றோம். நான் முன்வைக்கும் விமர்சனங்கள் கட்சிக்கு எதிரானது அல்லவென்றும், கட்சியின் தற்போதைய தலைவரின் செயல்பாட்டுக்கு எதிராகவே இருக்குமென்றும் கூறிவருகின்றார்.

இந்த கட்சியின் தலைமை, சமூகம் சம்பந்தமான முக்கிய விடயங்களில் தவரிழைக்க முற்படும் போதெல்லாம், இந்த செயளாலர் என்ற அதிகார பதவியூடாக அதனை தடைசெய்து வந்தேன் என்றும், அந்தவிடயங்கள் சமூகத்துக்கும், கிழக்குவாழ் முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பு அரணாகவும் இருந்து வந்தது என்றும் கூறிவருகின்றார்.

ஆனால் இன்று அந்த பதவியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டது மட்டுமல்ல என்னிடமிருந்து அந்த பதவி பறிக்கப்பட்டும் விட்டது என்றும் கூறியிருந்தார், இந்த விடயம் எனக்கு மட்டுமல்ல சமூகத்துக்கும் எதிர்காலத்தில் பெரிய ஆபத்தை கொண்டுவரும் அதனால்தான் நான் போராடுகின்றேன் என்றும் கூறிவருகின்றார்.

இந்த விடயத்தை நீதிமன்றம் கொண்டு செல்லுமாறு சுயாதீன தேர்தல் ஆணைக்குழு எனக்கு ஆலோசனை வழங்கியிருந்தது, எனினும் மர்ஹும் அஸ்ரப்பினால் உருவாக்கப்பட்ட கட்சியை நீதிமன்றம் வரையில் கொண்டுசெல்லக்கூடாது என்பதற்காக நான் நீதிமன்றம் செல்லவில்லை, அப்படி நான் சென்றிருந்தால் அவர்களினால் பேராளர் மாநாட்டை நடத்தியிருக்க முடியாது போயிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அப்படி என்றால் கட்சிவேறு, தலைவர் வேறு என்று கூறவருகின்றாரா? கட்சி பாதிக்கப்படும் என்பதற்காக, அந்த கட்சியை வைத்துக்கொண்டு தவறான பாதையில் செல்லும் தலைவரை எப்படி கட்டுப்படுத்துவது என்பதற்கு பதில் தெறியாமல் ஹசனலி போராடுகின்றாரா என்பது புரியாதபுதிராகவே உள்ளது.

கூலுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போல் உள்ளது ஹசனலி அவர்களின் நடவடிக்கை, நீங்கள் குறிப்பிடும் குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருந்தால், அதற்கு எதிராக நீங்கள் செல்லும் வழி போதுமானதாக இல்லை என்பது உங்களுக்கே தெரிந்திருந்தும் இதனை முன்னெடுத்துச் செல்வது ஆச்சரியமாக உள்ளது.

உங்களின் கூற்று எப்படியுள்ளது என்றால், எதிரி ஒருவன் நமக்கு சொந்தமான கவசவாகனத்தை கைப்பற்றி, நமக்கு எதிராக அதனை பயன்படுத்தும் போது கவசவாகனம் நம்முடையது என்பதனால் அதனை சேதப்படுத்த வேண்டாம் அதனை உள்ளிருந்து இயக்கும் எதிரியை தாக்குங்கள் என்று கட்டளையிடும் முட்டால் தளபதியையப் போல் உள்ளது உங்கள் கூற்று என்பதை நீங்கள் யோசிக்கத்தவறியது ஏன் என்று புரியவில்லை.

நேர் வழியில் சென்று நீதி தேட வழிதெறியாத உங்களால் எப்படி சமூகத்துக்கு நியாயம் பெற்றுக்கொடுக்க முடியும். ஆகவே மக்களை மடையர்களாக ஆக்குவதைவிட, பின் கதவால் சென்று தலைவருடன் பேச்சு நடத்தி உங்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதே உங்களுக்கு நல்லதாக முடியும் என்பதே எங்கள் கருத்தாகும். முடியாது விட்டால் வயதை கருத்தில் கொண்டு ஒதுங்கி விடுவதே உங்களுக்கு நல்லது என்று கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
எம்.எச்.எம்.இப்ராஹிம்,
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -