வீதிப்போக்குவரத்து சட்டங்கள் தொடர்பில் மக்களின் மனதில் மாற்றம் வேண்டும்..!

எம் எச் எம் அன்வர்-
காத்தான்குடி பிரதேசத்தில் வீதி விபத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றன சாரதிகளும் பாதசாரிகளும் போக்குவரத்து சட்டங்களை மீறி நடக்கின்றனர் இப்பகுதி மக்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே விபத்துக்களை தடுக்க முடியும்.

இவ்வாறு காத்தான்குடி சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில் போக்குவரத்து போலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் 165 ஏ சிவில் பாதுகாப்பு பிரிவுக்கான உத்தியோகத்தருமான எம் முஜாஹித் தெரிவித்தார்.

165 ஏ சிவில் பாதுகாப்பு பிரிவுக்கான தலைவர் எம்,ஜ,எம்,ஹாரிஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

காத்தான்குடி பிரதேசத்தில் நடக்கும் குற்றச் செயல்கள் தொடர்பில் சிவில் பாதுகாப்பு குழுக்கள் ஊடாக எமக்கு தெரிவியுங்கள் போதைபாவனை தற்போது அதிகரித்து காணப்படுகின்றது பாடசாலை மாணவர்கள் இப் பழக்கத்திற்கு அடிமையாகின்றனர் இது விடயமாக பெற்றோர்கள்; மிகுந்த அவதானிப்புடன் இருக்க வேண்டும்.

ஹெல்மட் அணியாமலும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றியும் வேகமாக சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் செலுத்துகின்றனர் இவை தொடர்பாக மோட்டார் சைக்கிள் இலக்கத்தை எமக்கு அறிவியுங்கள் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் பிரதான வீதிகளில் மிக வேகமாக வாகனத்தை செலுத்துகின்றனர் மஞ்சல் கோட்டுக்கடவையில் கூட விபத்து ஏற்படுகின்றது இப்பகுதி மக்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே வீதி விபத்துக்களை தடுக்க முடியும் இவ்வாறு தனதுரையில் தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வுக்கு அப்பகுதி கிராம சேவை உத்தியோகத்தர் எச் எம் தஸ்லீம் புதிதாக பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி திரு சந்தன மற்றும் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -