யு.எல்.எம். றியாஸ்-
அம்பாறை மாவட்டத்தில் அரச தாதி உத்தியோகத்தர்கள் இன்று ஒரு மணி நேர பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இதற்கமைய சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் இன்று 12 மணிதொடக்கம் ஒரு மணி வரை அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
6 அம்சக் கோரிக்கையை முன்வைத்து இவர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடடனர். " அதிகரிக்கப்படட அடிப்படை சம்பளத்திற்கு சமவிகிதமாக மேலதிக நேர ரேட் பெறுமதியை கூட்டு, இரண்டாம் மொழி தேர்ச்சிக்கான விதிமுறையை நிறுத்து, சுகாதார நிருவாகப் பதவிகளுக்கு எமது தொழில்களுக்கும் வாய்ப்பு வழங்கு 'உள்ளடங்கிய ஆறு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய சுலோகங்களுடன் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். குறித்த ஒருமணி நேர பணிப் பகிஷ்கரிப்பின் காரணமாக வைத்தியசாலையின் வழமையான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

