கியூபா நாட்டின் உயரிஸ்தானிகருடன் கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல்.!

கியூபா நாட்டின் இலங்கை மற்றும் மாலை தீவுக்கான உயரிஸ்தானிகர் ஜூஆனா எலேனா மற்றும் உயரிஸ்தானிகர் அலுவலகத்தின் ஆலோசகர் ராவுல் கேரி ஜாரியோ ஆகியோரை 13.02.2017 (திங்கள்) காலை 11.30 மணியளவில் அவரது கொழும்பு அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கிழக்கு மாகாண அபிவிருத்தி விசேடமாக திருகோணலை மாவட்ட அபிவிருத்தி வேலையற்றோர், யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த நிலையில் மீள் குடியேறமுடியாத நிலைமை, வறுமை கோட்டின்கீழ் வாழ்கின்றவர்களுக்கான வாழ்வாதார வசதிகள், மீனவர்கள் மற்றும் விவசாயத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் குறித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர் வலியுறுத்தினார். 

மேலும் அதுவிடயமாக எழுத்து மூலமான ஆவணம் ஒன்றை சமர்பித்ததுடன் மாகாண சபை உறுப்பினரின் அழைப்பை ஏற்று கிழக்கு மாகாணத்திற்கு வருகை தருவதாகவும் உயரிஸ்தானிகர் அதன் போது உறுதியளித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -