கல்விக்காகவே அதிக நிதியை ஒதுக்கியுள்ளேன் - அப்துல்லா மஹ்ரூப்

ஹஸ்பர் ஏ ஹலீம் கிண்ணியா-
திருகோணமலை மாவட்டத்தில் பல பின்தங்கிய பாடசாலைகள் காணப்படுவதையும் அதனை அமைச்சர் றிஸாத் பதியூதீன் ஊடாக பல்வேறு பாரிய திட்டங்களைச் செய்வதற்கும் முன்வந்திருக்கிறோம் இது தொடர்பான வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த எனது நிதியில் இருந்து 36 கோடி ரூபாவை கல்விக்காக ஒதுக்கியுள்ளேன் 24.3 வீதமாக இது காணப்படுகிறது ஆனால் தேசிய உலகலாவிய ரீதியில் கூட 6 வீதமே ஒதுக்கப்படுகிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமாகிய பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் நேற்று (12) கிண்ணியா நகர சபை மைதானத்தில் இடம்பெற்ற சுயதொழில் உள்ளீட்டுக்கான பொருட்கள் மற்றும் விளையாட்டுக்கழகங்களிக்கிடையிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

திருகோணமலையில் பாடசாலையின் குறைபாடுகளைக் கண்டறிந்து கல்வியினை முன்னேற்ற விசேட கவனத்தை தலைவர் றிஸாட் பதியுதீன் ஊடாக செய்வதற்கும் தூர பிரதேச மாணவர்களுக்காக துவிச்சக்கர வண்டிகளையும் அதிபர்களுக்கான கணணிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் இப்படிப்பட்ட கல்விக்கான சேவைகளை இவ்வருடத்தினுள் அமுல்படுத்த வேண்டிய நிலையுடன் எமது அபிவிருத்திப் பணிகள் அதனுடன் நின்று விடாது இவ்வருடத்தினுள் வீதிகள் அனைத்தையும் அபிவிருத்தி செய்வதோடு இதற்காக பல கோடி ரூபாக்களையும் ஒதுக்கியுள்ளேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் வர்த்தக வாணிப கைத்தொழில் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் மற்றும் கிராமிய அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் பங்குபற்றிய கிண்ணியா நிகழ்வில் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -