இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட 500Kg எகிப்துப் பெண்..!

எஸ்.ஹமீத்-
1,102 இறாத்தல் (500 Kg) எடையைக் கொண்ட, உலகத்திலேயே மிக அதிகமான உடல் நிறையைக் கொண்டவர் என நம்பப்படும் 36 வயதான எகிப்து நாட்டைச் சேர்ந்த பெண்மணி அஹமத் இமான் விஷேட சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

மிக்க சிரமத்தின் பேரில், அவருக்காகத் தயார் செய்யப்பட்டிருந்த கட்டிலில் வைத்தே அவரை விமானத்தில் ஏற்றியிருக்கிறார்கள். இமானுக்காக விமானத்தில் ஆக்சிஜன் வாயு சிலிண்டர்கள், மற்றும் மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்டு விஷேட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

விமானத்திலிருந்து இமானை பாரிய பாரம் தூக்கி (கிறேன்) மூலமாகவே இறக்கி, பெரிய வாகனத்தில் ஏற்றிக் கொண்டு போய் மும்பையிலுள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்திருக்கிறார்கள்.

கடந்த இருபது வருடங்களாகத் தன் படுக்கையறையை விட்டு வெளியில் எங்கும் போக முடியாதவராக இருந்தார் இமான். அவரால் மற்றவர்களுடன் உரையாடுவதும், அசைவதும் கூடக் கடினமாகவே இருந்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்னம் பாரிசவாதத்தால் தாக்கப்பட்டு வலது கையும் காலும் செயலற்றுப் போயின.

''ஏனையோரைப் போல வாழ்கின்ற பாக்கியம் என் சகோதரிக்கு கிட்டவில்லை. அவரது இளமைப் பருவத்தையும் அவரால் அனுபவிக்க முடியாது போயிற்று.'' என்று சொல்கிறார் இமானின் தங்கையும் அவரின் பராமரிப்பாளருமான ஷாய்மா.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -