யாழ் நாவற்குழியில் குடியேறிய குடும்பங்களுக்கு வீடமைப்புதிட்டம்.!

பாறுக் ஷிஹான்-
நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு வீடமை ப்புத்திட்டம் அமைத்து கொடுக்கப்படவுள்ளதாக தேசிய வீடமைப்பு அபி விருத்தி அதிகார சபையின் யாழ் மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

2017ம் ஆண்டிற்கான மிகப்பெரிய திட்டமாக நாவற்குழி பிரதேசத்தில் 250 வீடுகளைக் கொண்ட மாதிரிக் கிராமம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. நாவற்குழி பிரதேசத்தில் குடியேறியுள்ள 200 தமிழ் குடும்பங்கள் 50 சிங்களக் குடும்பங்களுக்கான வீடுகள் அமைக்கப்பட்வுள்ளன.

வீடொன்றிற்கு சுமார் 5 இலட்சம் ரூபா செலவிடப்படுவதுடன் குறித்த மாதிரிக் கிராமத்திலே அனைத்து வீடுகளும் அமைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -