முஸ்லிம் சமூகத்தின் மட்டுமல்லாது தேசியமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட கூட்டமானது கடந்த 14.12.2016 வியாழன் இரவு கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம் பெற்றது. கடந்த உயர் பீட கூட்டத்தில் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தினால் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாம் கட்டிடமானது கட்சிக்கு சொந்தமானதா? அல்லது தனி நபருக்கு சொந்தமானதா? என்ற கேள்வியினை முன்வைத்த வேளையில் பசீர் சேகுதாவூத்தின் கருத்தினை மேலும் கூற விடாது உயர் பீட உறுப்பினர்களினால் ஏற்படுத்தப்பட்ட தடங்களினால் கடந்த உயர் பீட கூட்டமானது அமளி துமளியுடன் முடிவிற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. அதற்கு எல்லா ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து முக்கிய செய்தியாக பிரசுரித்திருந்தமையினை காணக்கூடியதாக இருந்தது.
அதற்கு பிற்பாடு கடந்த 14.12.2016 வியாழன் இரவு கட்சியின் அடுத்த கூட்டமானது தாருஸ்ஸலாமில் இடம் பெற்ற பொழுது கட்சியின் செயலாளர் ஹசன் அலியின் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என பரவலாக பேசப்பட்டு வந்தது. தேர்தல் ஆணையாளர் கட்சியின் செயலாளர் யார் என்று கட்சியின் தலைமையினை கேட்டிருந்த நிலையில் குறித்த உயர் பீட கூட்டமானது நடை பெற்று முடிந்தது. ஆனால் கடந்த உயர் பீட கூட்டத்தில் முக்கிய பிரச்சனைக்கு காரணமாக இருந்த தவிசாளர் பசீர் சேகு தாவூத் இம் முறை இடம் பெற்ற உயர் பீட கூட்டத்தில் மிகவும் அமைதி காத்ததாக கூறப்பட்டு வருகின்றது.
ஆகவே குறித்த உயர் பீட கூட்டத்தில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது சம்பந்தமாகவும் செயலாளர் ஹசன் அலியின் பிரச்சனை எவ்வாறு தலைமையினாலும் உயர் பீட உறுப்பினர்களினாலும் கையாளப்பட்டது?, தவிசாளரின் மெளனத்திற்கான காரணம் என்ன? போன்ற பல கேள்விகளுக்கு தொலை பேசியூடாக நேரடியாக கட்சியின் தலைமைக்கு மிகவும் விசுவாசமாக செயற்பட்டு வருகின்ற கல்குடா தொகுதியின் முன்னாள் பராளுமன்ற வேட்பாளரும், கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளரும், உயர் பீட உறுப்பினருமான கணக்கறிஞர் றியாழ் வழங்கிய நேரடி பதில்கள் எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
