திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் முன் வைத்த யோசனைகள்


திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அரசாங்க அதிபர் புஸ்பகுமார தலைமையில் 15.12.2016(வியாழன்) காலை 9.00 மணியளவில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது

குறித்த கூட்டத்தில் அபிவிருத்தி குழுவின் இணை தலைவர்களான கெளரவ பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே,பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப்,இம்ரான் மஹ்ரூப்,துரைரத்தினம்,மாகாண அமைச்சர்களான ஆரியவாதி களபதி,துறை ராசசிங்கம்,மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர்,ஜனார்த்தனன்,ஜயந்த,அருண சிறிசேனா,லாஹிர் உட்பட திணைக்களத்தின் தலைவர் மற்றும் பாதுகாப்புப்படை அதிகாரிகள் அனைவரும் கலந்துகொண்டனர்

நாட்டில் இடம்பெற்ற கடந்த யுத்தத்தின் போது முல்லைத்தீவு பிரதேசத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அகதிகளை தற்காலிகமாக தங்க வைப்பதற்காக புல்மோட்டை 14 ம் கட்டைப் பகுதியில் பொது மக்களுக்கு சொந்தமான காணிகளில் தற்காலிகமாக முகாம் அமைத்த இடத்தினை மீளவும் காணி உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதுடன் அதற்க்கு அருகாமையில் இருக்கும் காணியை குச்சவெளி பிரதேச செயலகத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கான வீடமைப்பு அதிகார சபையினால் அமுல் படுத்தப்படும் வீடமைப்பு திட்டத்திற்கு கொடுக்க ஆவனை செய்தல்

தீர்வு ...

குறித்த பகுதியின் நிலைமைகளை குச்சவெளி பிரதேச செயலாளர் அவர்கள்
கூறுகையில் 13 ம் கட்டை பகுதியில் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டுள்ள காணிகளுக்குள் பொதுமக்களுடைய அனுமதி பத்திரமுள்ள காணிகள் இருப்பதால் அவற்றை விடுவிக்கலாம் எனவும் அதற்க்கு பதில் அளித்த அரசாங்க அதிபர் குறித்த விடயமாக தனக்கு ஆவணங்களை சமர்ப்பிக்கும் படி அதனூடாக பாதுகாப்பு அமைச்சிற்கு அனுப்பப்பட்டு அதற்கான நிலங்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்

புல்மோட்டை ஜின்னாபுரம் மண்கிண்டி மலை பிரதேசத்தில் பொது மக்களால் ஆண்டாண்டு காலமாக பராமரித்து குடியிருந்து பயிச்செய்கை மேற்கொண்ட காணிகளை இலங்கை கடற்படையினர் தங்களுக்கு வழங்கப்பட்ட 22 ஏக்கருக்கு மேலாக 103 ஏக்கர் காணிகளை மேலதிகமாக எல்லை இட்டு வைத்துள்ளனர் அவற்றை மீள கையளித்தல்

தீர்வு ...

குறித்த பிரச்சினை தொடர்பாக குச்சவெளி பிரதேச செயலாளர் பதில் அளிக்கையில் ஏலவே கடற்படை முகாமிற்காக 22 ஏக்கர் மாத்திரமே வழங்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் ஆட்சி செய்துவந்த காணிகள் 103 ஏக்கர் மேலதிகமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பதில் அளித்த அரசாங்க அதிபர் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும் அவற்றை பாதுகாப்பு அமைச்சிற்கு அனுப்பி மீட்டுத்தருவதாக கூறினார்

புல்மோட்டை கனிய மணல் தொழிற்சாலையினால் மேற்கொண்டுவரும் முறையற்ற மண் அகழ்வை கட்டுப்படுத்தி முறையான விதத்தில் மண் அகழ்வை மேற்கொள்ளல்

தீர்வு ....

அரசாங்க அதிபர் ஏற்கனவே தான் கனிப்பொருள் மணல் கூட்டுஸ்தாபன தலைவர் அசோக பீரிஸ் அவர்களுக்கு அறிவித்ததாகவும்
அத்தோடு மத்திய சுற்றாடல் சபை அதிகாரிக்கு உரிய முறையற்ற மண் அகழ்வு தொடர்பான புகைப்படங்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரால் காட்டப்பட்டதுடன் ஏற்கனவே புல்மோட்டை பிரதேசத்திற்கு விசேட குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு நிலைமைகள் கண்டறிந்ததாகவும்
உண்மையில் சில பகுதிகளில் அனுமதியற்று மண் அகழபடுவதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை மாவட்ட அதிகாரி அரசாங்க அதிபருக்கு தெரிவித்ததுடன் முறையற்ற மண் அகழ்வை தடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார் .

புல்மோட்டை பிரதேசத்தில் கால்நடைகளுக்காக யான் ஓயா தோணிக்கல் உள்ளடக்கிய பகுதியை ஏலவே வண பாலன திணைக்களத்தால் 3000 ஏக்கர் அடையாளமிடப்பட்ட பகுதியில் சிவில் பாதுகாப்பு படையினரால் 100 ஏக்கருக்கு மேலாக காடுகள் அளிக்கப்பட்டு தோட்டங்கள் செய்யப்படுவதுடன் அனுமதியற்ற கட்டிடங்கள் கட்டப்படுகின்றன எனவே உரிய நடவடிக்கை எடுக்கும்படி வேண்டப்பட்டது

தீர்வு ....

உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசாங்க அதிபரால் திருகோணமலை மாவட்ட வண பரிபாலன திணைக்கள அதிகாரிக்கும் குச்சவெளி பிரதேச செயலாளருக்கும் உத்தரவிட்டார்

குச்சவெளி பிரதேசத்தில் பிரதேச சபையால் நிர்மாணிக்கப்படவுள்ள பொது சந்தை கட்டிடத்தை கட்ட விடாமல் தொல்பொருளியல் திணைக்களத்தினால் தடுக்கப்பட்டமைக்கு காரணம்

தீர்வு...

தொல் பொருள் அதிகாரியால் அளிக்கப்பட்ட பதில் குறித்த பகுதி அண்டிய பகுதிகளில் தொல்பொருள் காணப்படுவதால் அவற்றின் எல்லைகள் சீர் அமைக்கப்படாத நிலையில் அவற்றை மதிப்பிடவேண்டி உள்ளது எனக்கூற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் இவ்வாறே அணைத்து அரசாங்க அபிவிருத்தி விலைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் குறித்த போது சந்தை கட்டிடம் அரச கட்டிடமே தவிர தனியாருக்கு சொந்தமானதல்ல எனத்துடன் அரசாங்க அதிபரால் விரைவாக எல்லைகள் இனக்கண்டு அறிவிக்கவேண்டும் என உத்தரவிட்டார்

மூதூர் பொது விளையாட்டு மைதானத்தின் வேலைகள் கொந்தராத்து காரர்களால் இன்னும் முடிக்கப்படாத நிலை குறித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் லாஹிரால் முன் வைக்கப்பட்டபோது
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் குறித்த விளையாட்டு மைதானத்திற்கு பொருத்தமற்ற மண் போடப்பட்டுள்ளதாகவும் அவற்றால் பெரும் அசௌகரியம் ஏற்படுவதாகவும்
எனவே குறித்த வேலைகளை முடிக்காத கொந்தராத்து காரர்களுக்கு எதிர்காலத்தில் கொந்தராத்துக்கள் வழங்கக்கூடாது எனவும் குறித்த மண் பிரதேசத்தில் காணப்படாவிட்டால் வேறு பிரதேசத்தில் எடுத்துவர அனுமதி வழங்கக்கோரி மாகாண சபை உறுப்பினரால் முன் வைக்கப்பட்டது

கிண்ணியாவின் புதிய நீண்ட பாலம் நிர்மாணிப்பதற்கு முன் பிரதேச மக்கள் கிண்ணியா துறையடினூடாக படகு (பாதை) பயன்படுத்திய வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் இடஒதுக்கீடு பகுதியில் கடந்த சில வாரங்களாக நிர்மாணிக்க பட்டு வந்த சட்ட விரோத கட்டிடம் புத்தர் சிலை வைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டு வந்தன குறித்த அனுமதி பெறப்படாத வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான பகுதியில் சட்ட விரோத கட்டிடம் அமைக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களால் முன் வைக்கப்பட்டதை அடுத்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர்

தீர்வு ...

குறித்த கட்டிடம் தொடர்பாக அரசாங்க அதிபரை நோக்கி இந்த நல்லாட்சியில் சமூக ஒற்றுமைக்கு மத்தியில் இவ்வாறான செயற்ப்பாடுகளை மேற்றுக்கொள்வது பொருத்தமற்றது கிண்ணியா வரவேற்பு கோபுரத்தில் முஸ்லிகளின் கலாச்சார சின்னங்கள் பிரதி பளிக்ககூடாது என பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது நியாயமாக இருந்தால் குறித்த சட்ட விரோத சிலை வைப்பு எந்த விதத்தில் நியாயமானது என்று கேள்வி எழுப்பியதுடன் திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பான வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியலாளரை நோக்கி
குறித்த விடயமாக உடன் நடவடிக்கை எடுக்கும்படி வேண்டியதை அடுத்து திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரால் திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பாகவுள்ள பிரதி போலீஸ் மா அதிபருக்கு குறித்த சீனக்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பணித்து சட்ட விரோத கட்டிடத்தை உடன் நிறுத்தும்படி உத்தரவிட்டார்

கிண்ணியா பிரதேச மேய்ச்சல் நிலம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப்பினால் முன் வைக்கப்பட்டபோது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர்

கிண்ணியா போன்று தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட களவான அட்டவான மற்றும் குச்சவெளி பிரதேச செயலக பிரதேசத்திற்கு நிலங்கள் ஒதுக்கப்படவேண்டும் குறிப்பாக கிண்ணியாவில் கால் நடைகளால் திருகோணமலை மாவட்டம் பால் உற்பத்தியில் முதலாவது இடத்தையும் கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது இடத்தையும் கொண்டு காணப்படுவதால் அவசியம் மேய்ச்சல் தரைகளை ஒதுக்கீடு செய்து கொடுக்கவேண்டும் எனவும் யோசனைகளை முன் வைக்கப்பட்டன

பதில்...


அரசாங்க அதிபர் கிண்ணியா பிரதேசத்திற்க 1000 ஏக்கர் முதல் கட்டமாக வழங்க அனுமதிக்க பட்டதாகவும் சில பகுதிகளில் வண பரிபால அதிகாரிகள் அனுமதிக்கல்வில்லை எனவும் பதில் அளித்த பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் எதிர்வரும் ஜனவரி மாதம் 12 ம் திகதி ஜனாதிபதி தலைமையில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய விசேட கூட்டம் உள்ளதாகவும் அன்றைய தினம் அதுபற்றி ஜனாதிபதிக்கு எடுத்துக்கூற இருப்பதாகவும் கூறினார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -