அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒரு நாளைக்கு கிடைத்த அதிக வருமானம் நேற்று (10) பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிவேக நெடுஞ்சாலைகள் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ். ஓபநாயக்க இது தொடர்பில் அறிவித்துள்ளார்.
இவ்வருடத்தில்தான் இப்பாதைகளில் அதிக வாகனங்கள் பிரயாணம் செய்துள்ளன. அதிக வருமானமும் இவ்வருடத்திலேயே பதிவாகியுள்ளன. தெற்கு அதிவேகப் பாதையினால் மாத்திரம் 17.06 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளது. அதிவேக பாதைகளின் முழுமையான வருமானமாக 26.05 மில்லியன் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். தெற்கு அதிவேக பாதையின் ஒருநாள் சாதாரண வருமானம் 11 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் இந்த வருமானம் சாதாரண வருமானத்தை விடவும் 6 மில்லியன் அதிகமாக கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
