தமது பிள்ளைகள் ஆங்கில அறிவில் தேர்ச்சி பெற்றவர்களாக வர வேண்டும் - ஷிப்லி



மது பிள்ளைகள் ஆங்கில அறிவில் தேர்ச்சி பெற்றவர்களாக வர வேண்டும் என்பதற்காக வெளி இடங்களிலுள்ள சர்வேதேச பாடசாலைகளில் சேர்த்து ஆரம்ப கல்வியினை கற்பிக்கின்றபோது அவர்கள் ஆங்கில அறிவினை கற்றுக்கொண்டாலும் பல்வேறுபட்ட கலாச்சார ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் குறிப்பிடார்.

யுனிக் (Unique) சர்வேதேச பாடசாலையின் 7வது வருடாந்த கலை நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் (04.12.2016 - ஞாயிற்றுக்கிழமை) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. யுனிக் (Unique) சர்வேதேச பாடசாலையின் பணிப்பாளர் Dr. மதனி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கலந்து கொண்டதோடு, கௌரவ அதிதியாக பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தி தலைவர் பொறியியலாளர் தௌபீக் அவர்களும் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய போதே பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

ஒரு மொழியினை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இஸ்லாமிய மார்க்க கொள்கை, விழுமியங்களை விட்டுக்கொடுப்பவர்களாக நாங்கள் இருந்துவிடக்கூடாது. அவ்வாறு மார்க்க ரீதியான விடயங்களிலிருந்து தூரமாக்கப்பட்டு கலாச்சார சீர்கேடுகளுடன் எமது பிள்ளைகள் வளர்கப்படுமாக இருந்தால் அத்தகைய பிள்ளைகளிடத்தில் ஒழுக்கம் என்பது குறைவாகவே காணப்படும். அவ்வாறு ஒழுக்கத்தில் குறைபாடுள்ளவர்களாக அப்பிள்ளைகள் இருந்தால் எத்தகைய சிறந்த கல்வியினையும் அவர்கள் கற்ற போதும் சமூகத்தின் நன்மைதிப்புமிக்க பிரஜைகளாக அவர்கள் உருவாக முடியாது.

அந்த வகையில் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு உற்பட்டு சர்வதேச பாடசாலைகளின் தராதரத்திற்கு சிறந்த கல்வியினை வழங்குகின்ற எமது ஊரில் உள்ள சிறந்த ஆரம்ப பாடசாலைகளில் ஒன்றான யுனிக் (Unique) சர்வேதேச பாடசாலையின் பணி பாராட்டத்தக்கது என குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றதோடு, அதிதியினால் மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -