தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டால் கடற்படையைக் கொண்டு துறைமுகத்தை கொண்டு செல்வோம் என்றும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை வரவு – செலவு திட்டத்தின் நிதி அமைச்சு குழு நிலை விவாதத்தின் போது சர்ச்சைக்குட்படுத்தப்பட்ட அதிகாரியின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் தாக்குதல் தொடர்பில் கடற்படை தளபதியிடமும் அம்பாந்தோட்டை கட்டளைத் தளபதியிடமும் விசாரித்தேன். இங்கு ஊழியர்களுக்கு தாக்குதல் நடத்தப்படவில்லை. இது முற்றிலும் பொய்யாகும்.
அங்குள்ள ஊழியர்கள் இரு கப்பல்களைச் சிறைப்பிடித்துள்ளனர். இதன் காரணமாகவே கடற்படையினர் தலையிட்டனர். எனினும் தாக்குதல் நடத்தவில்லை. இங்குள்ள கப்பல்களில் ஜப்பான் நாட்டுக்கு சொந்தமான கப்பலும் உள்ளது. இதனால் சர்வதேச அளவில் பிரச்சினைகள் ஏற்படும்.
இந்நிலையில் தற்போது பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் ஊழியர்கள் தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட்டால் துப்பாக்கிச்சூடு நடத்த தயங்க மாட்டோம். அத்துடன் போராட்டத்தை உடன் கைவிட வேண்டும் இல்லையேல் கடற்படையினரைக் கொண்டு துறைமுகத்தைக் கொண்டு செல்வோம்.
இதன் போது நாமல் ராஜபக் ஷ எம்.பி. பேசுகையில் கடற்படை தாக்குதல் நடத்தவில்லை எனக் கூற வேண்டாம். 8 பேர் காயமடைந்துள்ளர் இங்கு பேசிய சுஜிவ சேனசிங்க எம்.பி. யார் தாக்கினர் இராணுவத்தினரேயாவர் என்றார்.(வீகே)
