மூதூர் அரபா நகர் கிராமமானது மூன்று இனங்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் கிராமமாகும். இக்கிராமத்தில் வசித்த மக்கள் 1985ம் ஆண்டு யுத்த காரணமாக இடம் பெயர்ந்து மூதூர் அகதிகள் முகாம்களில் வசித்து வந்தனர். குடியேற்றத்தின் பின்னர் அரபா நகரில் வசிக்கும் மக்களுக்கு அவர்கள் போக்கு வரத்து செய்வதற்கு சிரமப்பட்டு இருக்கும் நிலையில் அவர்கள் கிராமத்து ஆற்றை கடப்பதற்கு பாலம் ஒரு முக்கிய தேவையாக இருந்தது. எனவே இப்பாலம் மூதூர் முஸ்லிம் எய்ட் மூலம் கட்டி கொடுக்கப்பட்டது.
சில வருடங்களின் பின் அரபா நகர் பாலம் ஒரு பகுதி இடிந்து சரிந்து போய் கிடக்கிறது. இந்நிலை தொடந்தும் நீடித்தால் இப்பாலம் சம்பூர்ணமாக உடைந்து மக்களின் பயணம் மிக அசௌகரிகங்களை மேற்கொள்ள நேரிடும். எனவே எமது மூதூர் பிரதேச அரசியல் தலைவர்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் சரி இம்மக்களின் அத்தியாவசியத்தேவையான பாலத்தை கண்காணித்து கட்டித்தருமாறு மூதூர் அரபா நகர் மக்களின் உரிமைக்காக மூதூர் நௌபால்டீன் நற்பணி மன்றத்தின் தலைவராக இருக்கும் நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

