(Breaking) மட்டக்களப்பில் பதற்றம் : பொலீஸார் குவிப்பு

பொதுபலசேனா அமைப்பினர் முன்னெடுக்க திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்டமொன்றினை தடுக்கும் முகமாக பொலிஸார் ரிஜிதென்ன பகுதியில் அமைத்துள்ள தடுப்பு காவலை அகற்றுமாறு சர்ச்சைக்குரிய பிக்கு அம்பிட்டிய சுமனரத்ன தேரர் பொலிஸாரிடம் முரண்பட்டு வருகின்றமையால் குறித்த பகுதியில் பதற்றநிலை உருவாகியுள்ளது.

ஏற்பட்டுள்ள பதற்றநிலைமையை கட்டுபடுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பொலிஸ் உயர் அதிகாரிகளுடன், கலகம் அடக்கும் பொலிஸாரும் குறித்த பிரதேசத்துக்கு வருகைத்தந்துள்ளனர்.

மட்டக்களப்புக்கு சென்றுள்ள ஞானசார தேரர் உட்பட்ட பொதுபலசேனா அமைப்பினர் மங்களராமய ரஜமகா விகாரையில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட பின்னர் கரடியனாறு பகுதியில் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருந்துள்ளனர்.

விடயத்தை அறிந்த பொலிஸார் பொதுபலசேனா அமைப்பினரை குறித்த பகுதிக்குள் நுளைய விடாமல் தடுப்புக் காவலொன்றை அமைத்துள்ளனர்.

எவ்வாறாயினும் குறித்த பகுதிக்குள் பொதுபலசேனா அமைப்பினரை உள்நுளைய விடுமாறு அம்பிட்டிய சுமனரத்ன தேரர் பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றமையால் குறித்த பகுதிக்குள் பதற்றநிலை உருவாகியுள்ளது.

பிந்திக்கிடைத்த செய்தி:-

பாறுக் ஷிஹான்-

பொதுபலசேனா அமைப்பினரின் மட்டக்களப்பு வருகை தடுக்கப்பட்டமையினால் பதற்ற நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.

இன்று (03) காலை முதல் மட்டக்களப்பு எல்லைப்பகுதியில் இவர்களை பாதுகாப்பு தரப்பினர் இடைமறித்ததுடன் மட்டக்களப்பு பிரதேசத்திற்கு செல்ல முடியாத வாறு தடை செய்துள்ளனர்.

இதன் போது ஐந்து பஸ்களில் வருகை தந்த பொதுபலசேனா அமைப்பினர் பொலிஸாருடன் முறுகலை ஏற்படுத்தியதுடன் புகையிரத போக்குவரத்துஇவீதிப்போக்குவரத்தினை தடைசெய்து அவ்விடத்தில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர்.

இதே வேளை பொதுபலசேனா அமைப்பினர் மட்டக்களப்பு நகருக்கு உள்நுழைய விடாது நீதி மன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 
தற்போது பொலிஸாரினால் தடுக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கலகத்தடுப்பு பொலிஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
முந்திய செய்திக்கு இங்கே click செய்யவும்.
படங்கள் -->

















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -