இளைஞர் பாராளுமன்றத்தேர்தல் : பொத்துவில் தொகுதியில் காரைதீவு சுலக்சன் வெற்றி

காரைதீவு சகா-
4வது இளைஞர் பாராளுமன்றத்தேர்தலில் பொத்துவில் தொகுதியில் காரைதீவைச்சேர்ந்த இளம்வேட்பாளர் லோகராஜ் சுலக்சன் வெற்றிவாகை சூடியுள்ளார். இவர் பெற்ற வாக்குகள் 1256. காரைதீவு திருக்கோவில் பகுதிகளில் இவருக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கப்பபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

கடந்த தேர்தலில் இவர் 06வாக்குகளால் மயிரிழையில் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. காரைதீவு பிரதேச செயலகத்தில் தேர்தல் இன்று ஜருராக நடைபெற்றது. இன்று 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் இளைஞர்பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஜந்து உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு 68வேட்பாளர்கள் களத்தில் குதித்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 17பேரும் கல்முனைத்தேர்தல் தொகுதியில் 08பேரும் சம்மாந்துறைத் தேர்தல்தொகுதியில் 09பேரும் அம்பாறை தேர்தல்தொகுதியில் 34பேரும் மொத்தம் 68பேர் போட்டியிட்டனர்.

04தேர்தல் தொகுதிகளிலிருந்து 04உறுப்பினர்கள் இளைஞர் பாராளுமன்றிற்கு தெரிவுசெய்யப்படுவதோடு போனஸ் ஆசனமும் வழங்கப்படவுள்ளது என அம்பாறை மாவட்ட இளைஞர்சேவை அதிகாரி யு.எல்.ஏ.மஜீட் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -