யு .எச்.ஹைதர் அலி-
சிரியாவில் பஷர் அல் அசாத்துக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி போராட்டம் நடத்தி வந்ததை நாம் அறிவோம். போராட்ட குழுக்களை வழிநடாத்தியவர்களின் முக்கியமானவர் அமெரிக்க பின்னனியில் இருந்து தொழிப்பட்ட புர்ஹான் காலியோன் என்பவர்.
2010ல் சிரிய அரசுக்கு எதிரான, கிளர்ச்சியாளர்களின் ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்தது. இந்த கிளர்ச்சியாலர்கள் துருக்கியின் ஆதரவுடன் அங்கிருந்து ‘சுதந்திர சிரியா இராணுவம்’ (FSA) என்ற பெயரில் இயங்கினார்கள். ஆனால், மேற்கத்திய நாடுகளில் எதிர்பார்க்கப் பட்டது போன்று, சிரியாவின் சுதந்திர இராணுவம், பலமான எதிர்ப்புச் சக்தியாக உருவெடுக்கவில்லை.
சிரியா அரசுக்கு எதிராக போராடும் போராழிக் குழுக்களுக்கு, தாராளமாக நிதி மற்றும் ஆயுதங்களை அள்ளி வழங்க பல வெளிநாடுகள் முன்வந்தன. இந்த வெளிநாட்டு நிதி, ஆயுதங்கள் துருக்கி ஊடாகவே கிடைத்து வந்தன.
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஈராக்கிய அல்கைதா சிரியாவிற்குள் ஊடுருவியது. பின்லாடனின் அல்கைதாவும், ஈராக் அல்கைதாவும் ஒன்றல்ல. ஈராக் அல்கைதா, அந்த நாட்டு சமூகத்தை பிரதிநிதித்துவ படுத்திய அமைப்பு. பின்லாடனின் அல்கைதாவின் அரசியல் கொள்கைகளை வரித்துக் கொண்டனர். அதில் முக்கியமானது, முதலாம் உலக யுத்த முடிவில் ஏற்பட்ட பிரிட்டிஷ; – பிரெஞ்சு ஒப்பந்தம் (Syces – Picot Agreement).
முதலாம் உலகப்போரின் முடிவில் தான், இன்றுள்ள சிரியா, ஈராக் என்ற தேச எல்லைகள் பிரிக்கப் பட்டன. எல்லை பிரிப்பது குறித்து, அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த அரபு மக்களுடனோ, அவர்களின் பிரதிதிகளுடனோ கலந்தாலோசிக்கப் படவில்லை. அதைக் காரணமாக காட்டும் அல்கைதா, அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து வருகின்றது. அதனால், ஈராக் நாட்டை மட்டுமல்ல, சிரியாவையும் சேர்த்து அரசமைப்பது அவர்களின் எதிர்கால இலட்சியம். ஈராக்கிய அல்கைதா, அபு முஹம்மட் அல் ஜூலானி என்பவரின் தலைமையில் தலைமையிலான அல் நுஸ்ரா (Jabhat al-Nusra) என்ற பெயரில் சிரியாவில் கலமிறங்கியது.
அது ஒரு அல்கைதா பாணி இயக்கம். அதன் அர்த்தம், அந்த இயக்கத்தில் எந்த நாட்டவரும் உறுப்பினராக சேரலாம். அதனால், சர்வதேச ஜிகாதிகளையும் ஒன்று சேர்க்க முடிந்தது. குறிப்பாக லிபியாவில் கடாபிக்கு எதிராக போரிட்ட போராளிகள் சிரியாவில் வந்து குவிந்தார்கள். ஆட்பலம் ஆயுத பலம் மிக்க அல் நுஸ்ரா, பல இடங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அந்தவகையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஒருநகரம் தான் அலெப்போவும். அந்நுஸ்ரா வின் கொள்கைகளும் ஐசிஸ் அமைப்பின் கொள்கையும் ஈராக் சிரியா விடயத்தில் ஒன்று என்பதால் இரண்டு குழுக்களும் ஒன்றினைந்தனர் . ஒரே இடத்தில் இருந்து உதவிகளையும் ஆயுதங்களையும் பெற்றனர். படை வீரர்களையும் பரிமாறிக்கொண்டனர். ஐசிஸ் தோல்வியை கண்டதும் அநேகமானவர்கள் அந்நுஸ்ராவோடு இனைந்து கொண்டனர் .
ஆனால், ஊடகங்கள் சிரியாவில் அல்கைதாவின் இருப்பை மூடி மறைத்தே வந்தன. அல் நுஸ்ரா பெற்ற போர்க்கல வெற்றிகளை, FSA பெற்ற வெற்றிகள் என்று திரித்துக் கூறினார்கள்.
ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த இளைஞர்களும், சிரியாவில் போரிடுவது பற்றிய தகவல்கள், நாம் அறிவோம் ஆனாலும் ஐரோப்பாவை பயங்கரவாதம் ஆட்டியதன் பின்னர் தான் சர்வதேசம் சிரியாவில் சிரியாவில் அல் நுஸ்ரா என்ற அல்கைதா பாணி இயக்கம் இருக்கின்றது என்ற உண்மையை ஒத்துக் கொள்ள ஆரம்பித்தன.
தொடரும் 2...
