கண்டி மாவட்டம், கலகெதர – கலுவான மற்றும் பௌல்பாவ பிரதேச மக்களின் மிக நீண்ட காலமாக நிலவிவரும் குடிநீர்பிரச்சினைக்கு தீர்வாக சமூக நீர் வழங்கல் திட்டத்தினையும், கலகெதர பௌல்பாவ பிரதேசத்தில் 1 கி.மீ. பாதை அபிவிருத்தி, மற்றும் வத்தேகமே – மீகம்மான பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக நிலவிவரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாகசமூக நீர் வழங்கல் திட்டத்தினையும் ஆரம்பிப்பதற்கான நிதியினை அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று (17) வழங்கி வைத்தார்.
இவ் அவ்விருத்தி பணிகளுக்கான நிதியினை அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினூடாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் அல்விஸ், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுல்லாஹ் மற்றும்முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அம்ஜாத் முத்தலிப், அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் அனீஸ்தீன் உட்பட அரசியல்பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.






