"விற்றுப் பிழைப்பவர்கள் நாங்கள் அல்ல"

-ஹஸீர் -

ஏற்கனவே “ விற்றுப் பிழைப்பவர்கள் “ என்கிற தலைப்பில் வேறு ஒரு கட்டுரை தினசரி ஒன்றில் சில வாரங்களுக்கு முன்னர் பிரசுரமாகி இருந்தது . தலைப்பிற்கு பஞ்சம் பிடித்த , சொந்தப் பெயரில் முகங்காட்ட வக்கிரம் அற்ற வெட்கங் கெட்டவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை .

ஆனாலும் தானும் செய்யாது , செய்பவர்களையும் செய்ய விடாது குழப்புகிற இந்த வைக்கோல் பட்டறை ஜீவன்களால் பொது மகன் பிழையாக வழி நடத்தப் படுவதை தடுப்பதற்காகவேனும் சில விடயங்களை தெளிவுபடுத்தவேண்டி கடப்பாடு நேர்ந்துவிடுகிறது அதனாலேயே இதனைப் பதிவிடுகிறேன்

மிக நீண்ட காலமாக , சுமார் ஒரு தசாப்த காலத்திற்கும் அதிகமாக கவிஞர் திலகம் அஷ்ரப் அவர்களின் “ நானெனும் நீ “ நூல் கிடைக்கப் பெறாதவர்களின் ஆதங்கம் இருந்து வந்தது .இப்போது திடீரென்று பதிப்புரிமை பற்றி அலறியடித்துக்கொண்டு தொலைபேசியில் முதலைக்கண்ணீர் வடிப்பவர்கள் , இது பற்றி பலவருடங்களாக உரியவர்களிடம் வேண்டுகோள் வைக்காது இருந்துவிட்டு , இப்போது மஞ்சள் கவருக்காக கெஞ்சி கூத்தாடுகிறார்கள்

“ நானெனும் நீ “ புத்தகத்தை மீள அச்சிடும் பொழுது ஒரு புத்தகத்தின் விலை 453 ரூபாவாக முடிந்தது. இருப்பினும் புத்தகத்தின் விலையை 400 ரூபாய் என்றே பெறுமதி இட்டிருக்கின்றோம். இந்த புத்தகத்தை விற்று காசாக்கிதான் கட்சி வளர்க்க வேண்டும் என்கின்ற கேவலமான நிலையில் எமது கட்சி இல்லை.

வெளியீட்டு விழாவின் பொழுது கௌரவப் பிரதிகளுக்குப் பிறகு மேடைக்கு அழைக்கப்பட்ட அனைவருமே புத்தகத்தை இலவசமாகவே பெற்று சென்றனர். பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள் இப்புத்தகத்தை வெளியிட்ட பொழுது அவ்விழாவுக்கான அழைப்பிதழுக்குள்ளேயே இன்னொமொரு கடிதத்தில் புத்தகத்தின் விலையை குறிப்பிட்டதுடன் அன்றைய விழாவில் புத்தகத்தை வாங்குபவர்களுக்கு மலிவு விலையில் கொடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது அவரின் கையில் காசு இல்லாததால் அல்ல. புத்தகத்தை வாசகன் காசுகொடுத்தே வாங்கவேண்டும் என்கிறகாரணத்தினாலேயே ஆகும் .

இலக்கியத்திற்கு ஒரு பெறுமானம் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்தார்.

அவரின் முன்மாதிரியில் இருந்து வழுவ முஸ்லிம் காங்கிரஸ் உண்மை போராளி ஒரு போதும் விரும்ப மாட்டான். எனவேதான் புத்தகத்தை அச்சுவிலையிலும் குறைவாக காசு கொடுத்து வாங்குமாறு வினயமாக கேட்டு கொண்டிருக்கிறோம்.

பெருந்தலைவரின் அகால மரணத்திற்கு பிறகு அவரை தபால் முத்திரையாகவும், பாராளுமன்ற உரைகளாகவும் அவருடனான நினைவு பதிப்புக்களாகவும் இப்போது அவரின் கவிதைகளாகவும் வாழ வைக்கின்ற அந்த கடமையை முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே இன்று வரை செய்து வந்திருக்கிறது என்பதை இக்கட்டுரையாளர் புரிந்து கொள்ள வேண்டும்.

முதல்பதிப்பாகட்டும், இரண்டாம் பதிப்பாகட்டும், மீள்பதிப்பாகட்டும் எல்லாமே புதிய வெளிச்சம் பதிப்பகத்தாலேயே வெளியிடப்பட்டிருக்கிறது. புதிய வெளிச்சங்கள் பதிப்பகம் தலைவர் அஷ்ரப் அவர்களாலேயே ஆரம்பிக்கப்பட்டது.

பேரியல் அம்மையாரிடம் இவ் வெளியீட்டு முயற்சி பற்றிக் கதைக்கவென்று ஒருவரைப் பணித்திருந்த்தோம் . திடீரென்று , புத்தக வெளியீட்டு விழா , இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பொன்விழாவாக பரிமாணம் மாறியதால் உண்டான வேலைப்பளு காரணமாக அவர் தனது கடமையைச் செய்யாது தவறி விட்டார் . அதட்காக வருந்துகின்றோம் .அது மிகப்பெரிய தவறுதல் என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொள்ள நாங்கள் தயங்கவில்லை

உண்மையிலேயே முதலாவது கௌரவப் பிரதியை அம்மையாருக்கும் , அடுத்ததை அமான் அஷ்ரப் அவர்களுக்குமே கொடுக்க ஆவலுடன் இருந்தோம் . அன்று அது சாத்தியமாகவில்லை .

அனால் இப்படி இடையில் நுழைந்து சிண்டு முடிகிற சில்லறைகள் , முன்னர் அஷ்ரப் சேரின் பாராளுமன்ற உரைகளை வெளியிட்ட போதும் , முத்திரை வெளியிட்ட போதும் அம்மையார் அவர்களை அழைத்து கௌரவித்துள்ளோம் என்கிற செய்திகளை வேண்டுமென்றே மறைத்துவிடுவது அவர்களின் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடே தவிர வேறல்ல .

புதிய வெளிச்சம் பதிப்பகம் என்பதும் மாமனிதர் அஷ்ரபின் இன்னொரு குழந்தைதான் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -