அப்துல்சலாம் யாசீம்-
கிண்ணியா தள வைத்தியசாலையில் 08ம் திகதி இரவு வாந்தி எடுப்பதாக அனுமதிக்கப்பட்ட இளைுன் இன்று (09) மாலை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையில் வீதியில் வாந்தியெடுப்பதாக கூறி அனுமதித்த நபரை கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த இளைுன் கிண்ணியா- மஹ்ரூப் நகர் பகுதியைச்சேர்ந்த அன்ஸார் மப்ரி (19 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது 08ம் திகதி இரவு கிண்ணியா மத்திய மஹா வித்தியாலத்திற்கு முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த இளைுனுடன் 52 வயதுடைய நபர் செலுத்திய மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைுன் விழுந்த நிலையில் வாந்தி எடுத்துள்ளார்.
மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த 52 வயதுடைய கிண்ணியா பகுதியைச்சேர்ந்த நபர் மோதிய இளைுனை வைத்தியசாலையில் வீதியில் வாந்தி எடுப்பதை கண்டு அழைத்து வந்ததென கூறி அனுமதித்துள்ளார். இவ் இளைஞன் உளநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் விபத்து பற்றி தெரிவிக்காத நிலையில் வாந்தி எடுப்பதாக அழைத்து வந்த நபர் வழங்கிய தகவலையடுத்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தார்.
இவ்வேளையில் தொடர்ந்தும் வாந்தி எடுப்பதை அவதானித்த வைத்தியர் தலையை ஸ்கேனிங் செய்வதற்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் அதில் தலைப்பகுதியில் இரத்தம் கசிவதாகவும் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்ததாகவும் அங்குள்ள வைத்திய நிபுணர் சத்திரசிகிச்சை செய்தும் தப்ப வைக்க முடியாது மீண்டும் கிண்ணியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பணித்துள்ளார்.
இதேவேளை அவரை கிண்ணியா தள வைத்தியசாலைக்கு கொண்டு வரும் வேளை உயிரிழந்துள்ளதாகவும் சட்ட வைத்திய நிபுணரின் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞனின் மரணம் தொடர்பில் வாந்தி எடுப்பதாக அழைத்து வந்த நபரை கைது செய்து விசாரணை செய்த போது மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் அதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
