இக்பால் அலி-
கண்டி நகரிலுள்ள முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இன நல்லிணக்கத்தைக் கருத்திற் கொண்டு நத்தார் பண்டிகையை முன்னிட்டு கண்டி புனித அந்தோனியார் கிறிஸ்தவ தேவாலயத்தின் பிரதான ஆண்டகை வணபிதா ஐவன் ஜயசுந்தர அவர்களுடனான விசேட சந்திப்பு இன்று 24-12-2016 கண்டி கொட்டுகொடல்ல வீதியில் அமைந்துள்ள தேவாலயத்தில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது கண்டி நகரிலுள்ள முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சார்பாக அஷ்ஷெய்க் பஸ்லுர் ரஹ்மான் , கண்டி ஓராபி பாஷா நிலையத்தின் பணிப்பாளர் அல்ஹாஜ் சலீம்டீன், இஸ்மாயீல் ஹாஜியார், மதார் ஹாஜியார் மற்றும் அஸ்ஹர் ஹாஜியார் உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதைப் படங்களில் காணலாம்.



