தைய்யல் பயிற்சியை பூர்த்தி செய்த யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கிய நிகழ்வு..!

ஜு னைட்.எம்.பஹ்த்-
காத்தான்குடியில் வறுமை நிலையில் வாழுகின்ற யுவதிகளுக்கு தொழில் வழிகாட்டல் வழங்கும் நோக்கில் சமூக சேவையாளர் PMM. சகாப்தீன் ஹாஜியாரின் முயற்சியில் நடாத்தப்பட்டுவரும் RGF இலவச தைய்யல் பயிற்சி நிலையத்தில் மூன்று மாத பயிற்சியை நிறைவு செய்த சுமார் 80 யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 23.12.2016 வெள்ளிக்கிழமை காத்தான்குடி அல் மனார் மண்டபத்தில் இடம்பெற்றது..

மேற்படி பயிற்சிநெறி SLITA நிறுவனத்தின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இவ் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் Mr. Sarath Wijeyabagu தொழில்நுட்பவியலாளர் (SLITA), Mrs. Rukshini De silve - உதவி தொழில்நுட்பவியலாளர் (SLITA), Mrs. Shamali Aariyaratne உதவி தொழில்நுட்பவியலாளர் (SLITA) மற்றும் காத்தான்குடி பிரதேச சபை கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான MTM.ASmy, Jifry Mathani, Farvin, Khairiya மற்றும் RGF நிறுவனற்றின் பொது முகாமையாளர் MTM சித்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் சான்றிதழ்களும் வழங்கி வைத்தனர்.

இந் நிகழ்வில் உரையாற்றிய RGF நிறுவனத்தின் உரிமையாளர் சமூக சேவையாளர் PMM.ஸஹாப்தீன் ஹாஜியார்:-

இதுவரையில் சுமார் 300 க்கு மேற்பட்ட யுவதிகள் RGF பயிற்சி நிலையத்தில் இப் பயிற்சி நெறியை பூர்த்தி செய்து முடித்து சான்றிதழை பெற்றுள்ளனர். அவர்களும் தொழில் வாய்ப்புகள் மிக குறைவாகவே காணப்படுகிறது. அதற்காகவே RGF ஆடை தொழிற்சாலை ஒன்றை உருவாக்கி அதில் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கி வருகிறோம். அத் தொழிற்சாலையில் தைக்கப்படும் ஆடைகளை நாடளாவிய ரீதியில் விநியோகம் செய்கிறோம். அல்லாஹ்வின் உதவியுடனும் நமது வர்த்தக நல்லுள்ளம் படைத்தவர்களின் ஆதரவுடன் இவ்வாறான தொரு சமூகப்பணி செய்துவருகிறோம். சில யுவதிகள் தொழிற்சாலை வந்து கடமையாற்ற இயலாதவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் வீட்டில் இருந்து தொழில் செய்யக்கூடிய ஏற்பாடு செய்ய தீர்மானித்திருக்கிறோம். எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் சமூக சேவையாளர்கள்,பொதுமக்கள், பிரமுகர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -