க.கிஷாந்தன்-

கூட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய கோரி ஐம்பதாயிரம் கையொப்பங்களைத் திரட்டி ஜனாதிபதிக்கு வழங்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக, 10.12.2016 அன்று சனிக்கிழமை நுவரெலியா – இராகலை பகுதியில் கையெழுத்து வேட்டையொன்று இடம்பெற்றது.
சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் பிராந்திய பொறுப்பாளர் எஸ்.மோகன்ராஜ் தலைமையில் மேற்படி கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.
க்கையின் முன்னோடி நடவடிக்கையாக தோட்டங்கள் தோறும் தோட்ட தொழிலாளர்களின் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேலும் இதனை சர்வதேச தொழில் ஸ்தாபனத்திற்கு அழுத்தமாக கொண்டு செல்லும் முகமாகவும், உச்ச நீதிமன்றத்தில் இதற்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்காகவும் இந்த கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளதாக சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு தெரிவித்துள்ளது.