சிவனொளிபாதமலைக்கான பருவகால யாத்திரை 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது

க.கிஷாந்தன்-

சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் எதிர்வரும் 13.12.2016 அன்று பூரணை தினத்துடன்



ஆரம்பமாகவுள்ளதாக சிவனொளிபாதலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்துள்ளார்.

இவ்வருடத்திற்கான சிவனொளிபாதமலை யாத்திரைப் பருவக்காலத்தை ஆரம்பிக்கும் முகமாக இரத்தினபுரி, பெல்மதுளை, கல்பொத்தாவெல ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டுள்ள சமன்தேவ விக்கிரமும் பூஜைப்பொருட்களும் தாங்கிய இரத பவனியாக 12.12.2016 அன்று சுபவேளையில புறப்பட்டு பெல்மதுளை, இரத்தினபுரி, கிதுல்கல, கினிகத்தேனை, வட்டவளை, அட்டன், நோர்வூட், மஸ்கெலியா, நல்லத்தண்ணி வழியாக சிவனொளிபாதமலையின் அடிவாரத்தினை அன்றையதினம் இரவு வந்தடையும்.

இம்முறையும் 3 வீதிகளின் ஊடாக ஊர்வலம் பயணிக்கவுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் இரத்தினபுரி – அவிசாவளை வீதியில் ஊர்வலம் பயணித்து ஹட்டன் - நல்லதண்ணி ஊடாக சிவனொளிபாதமலைக்கு ஒரு ஊர்வலம் பயணிக்கவுள்ளது.

மற்றைய ஊர்வலம் இரத்தினபுரி – பலாபத்தல வீதி ஊடாக பயணிக்கவுள்ளது. தெய்வீக ஆபரணங்களை ஏந்திய மூன்றாவது ஊர்வலம் பெல்மடுல்ல – ஓப்பநாயக்க, பலங்கொட, பின்னவல, பொகவந்தலாவ ஊடாக சிவனொளிபாதமலையை அடையவுள்ளது.

அத்துடன், சமன்தேவ விக்கிரமும் பூஜைப்பொருட்களும் மலை உச்சிக்குக் கொண்டுசெல்லப்பட்டு பிரதிஷ்டை செய்ததன் பின்னர் 13ஆம் திகதி அதிகாலை நடைபெறவுள்ள விசேட பூஜைகளைத் தொடர்ந்து 2016 – 2017ம் வருடத்திற்கான சிவனொளிபாதமலை யாத்திரைப் பருவக்காலம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சிவனொலிபாத மலை பருவகால யாத்திரை காலப்பகுதியில் பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு நுவரெலியா மாவட்ட செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், யாத்திரிகர்களுக்கு மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தில் நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யாத்திரிகர்களுக்காக விசேட போக்குவரத்துச்சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும், நல்லதண்ணி பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட தயாராகியுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -