ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மீதமுள்ளதும் சட்டத்தரணி சல்மான் வசம் உள்ளதுமான தேசியப்பட்டியல் அனேகரின் எதிர்பார்ப்பில் அட்டாளைச்சேனைக்கு கிடைக்கும் என்பதாகவே இருந்தது. ஆனால் அது மீண்டும் நிந்தவூருக்கே செல்லவிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இவ்வாரமே சல்மானின் வசமுள்ள தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி அவர்களுக்கு வழங்கப்படவுள்ளமை உயர்மட்டத்தில் இருந்துவந்திருக்கும் உண்மைத் தகவலாகும்.
ஆனால் வாக்குறுதியழிக்கப்பட்ட அட்டாளைச்சேனை மற்றும் கல்குடா போன்ற ஊர்களி நிலை எவ்வாறு அமையும் என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அத்துடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி புத்தளம் நபவிக்கு வழங்கிய தேசியப் பட்டியல் பதவியை அதன் காலம் முடியும்தறுவாயில் அம்பாரைக்கே வழங்கவுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எது எவ்வாறாயினும் மக்களின் நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களிடமே உள்ளதனைப் புரிந்து நடந்து கொள்ளல் அனைவருக்கும் நன்று என்பதே இன்றைய எத்திவைக்க வேண்டிய தகவலாகும்.
