மூதூர் அக்கரைச்சேணையில் வசிக்கும் சேகுத்தம்பி சஹாப்தீன் அவர்களின் ஓலைக்குடிசையின் பக்கம் என் பார்வை பட்டபோது அங்கு சென்று அவர்களிடம் சற்று பேசிக்கொண்டிருந்தேன்.
அவர்கள் கூறியதாவது:-
யுத்தகாலத்திலிருந்து இங்குதான் வசித்து வருகிறோம். எங்கள் பெண் குழந்தைகள் தலைபட்டவுடன் அவர்கள் ஐந்து பேருக்கும் இந்த இடத்தை பிரித்து கொடுத்து விட்டோம். ஆனாலும் எங்களுக்கு எந்த வசதியும் இல்லை வீட்டை கட்டி கொடுப்பதற்கு. இந்த ஓலை குடிசையில் தான் என் குழந்தைகள் வசிக்கின்றனர். வீடமைப்பு திட்டத்தில் வீடுகட்டி கொடுக்கிறார்கள். தனியார் நிறுவனங்கள் வந்து வீடு கட்டி கொடுக்கிறார்கள். ஆனால் நாங்கள் பல அரசாங்க உத்யியோகத்தர்களிடம் முறையிட்டதுடன் தனியார் நிறுவனங்களிடம் உதவி கோறினோம். யாரும் கண்டுக்கொள்வதாக இல்லை.
வருகிறார்கள் போட்டோபிடிக்கிறார்கள் செய்து தருகிறோம் என்று கூறிவிட்டு போய் அதன் பின்னர் அவர்களை கண்ணால் கான முடிவதில்லை. அரசியல் செய்பவர்களும் வந்து வாக்குறுதி தந்து சென்றவர்கள் மீண்டும் இனி அவர்களை அரசியல் காலம் நெருங்கினால் தான் பார்க்க முடியும். அல்லாஹ் ஏழைகள் மீது இரக்கம் கொண்டதால் தான் நாங்கள் எல்லாம் இந்த மழை வெள்ளத்தில் உயிரோடு வாழ்கிறோம். இன்னும் மனித நேயம் உள்ளவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படிப்பட்ட சில கருணை உளம் கொண்ட மூதூர் வைத்திய அதிகாரி ஜெஸ்மீன் டொக்டர் எனது ஒரு மகளுக்கு தற்காலிகமாக இருக்கும் வசதியாக ஒரு ரூமை அவருடைய சொந்த பணத்தில் கட்டித்தந்திருக்கிறார்.
அதுபோல் மௌலவி ஜின்னா அவர்கள் இரண்டு கழிவறைகளை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். மூதூர் நத்வதுல் உலமா அறபுக்கல்லூரி அதிபர் கரீம் மௌலவி அவர்கள் கிணறு ஒன்றை கட்டித்தந்திருக்கிறார்கள் . அவர்களுக்கு அல்லாஹ் மேலான சுவர்க்கத்தை தருவானாக என பிறாத்திக்கின்றோம். ஆனாலும் எங்கள் இந்த வாழ்கையை மாற்றி இந்த குடிசையில் இருக்கும் சிறு குழந்தைகள் குளிரிலும் மழை வந்தால் ஒழுகும் வீட்டில் கஸ்டப்படுவதைப்பார்த்து மனம் குமுறுகின்றது. நாங்கள் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துகிறோம். வருவது அடைமழைகாலம் என்ன செய்வோம் என கவலையுடனும் கண்ணீரோடும் இருக்கிறோம். அன்புள்ளம் கொண்ட அரசியல் வாதிகள் பொது நிறுவனங்கள் அல்லது எங்கள் மீது இரக்கம் கொண்ட பணம்படைத்தவர்கள் யாராவது முன் வந்து எங்கள் வீடுகளை கட்டி எங்கள் பெண் மக்கள் வாழ வசதிகள் செய்து தருமாறு மிகுந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அல்லாஹ் உங்களுக்கு உயர்ந்த சுவர்கத்தை மறுமையிலும் தருவான் இவ்வுலகில் ஆபத்துகளிலுமிருந்து காப்பாற்றுவான். இப்படி அத்தாயார் அழுது புழம்பியது கங்களில் கண்ணீர் சிந்தும் காட்சி ஆனது. எனவே நம்மில் யாரும் வசதி படைத்தவர்கள் இருப்பின் இவர்கள் தேவையான வீட்டை கட்டிக்கொடுக்க முயற்சி எடுக்க வேண்டும். இவர்கள் மட்டுமே இவ்வாறான வாழ்கையையும் துன்பத்தையும் அனுபவிக்க வில்லை இப்படி எத்தனையோ ஏராளமான ஏழைகள் வறிய குடும்பங்கள் வயதுக்கு வந்த குமார் பிள்ளைகளையும் சிறு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு அல்லல் படுகின்றனர்.
இந்த நிலை மாற வேண்டும் 1990களில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இன்னும் அவர்கள் பொலிஸ் வாக்குமூலப்பேப்பர்களோடும் வீட்டு மானியம் அட்டைகளோடும் அழைந்து அவர்களுக்கு இன்னும் பல சந்ததிகள் தலைப்பட்டும் விட்டனர் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை அதுபோல் சுனாமியின் போது பாதிக்கப்பட்ட மக்களில் கூட உதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தவண்ணம் இன்னும் காத்துக்கிடைக்கின்றனர் உன்மையில் இந்த தரவுகளை சரியான முறையில் திரட்டி அதற்கான உடனடித் தீர்வுகளை எமது பிரதே ப.ம.உ. அரச உத்தியோகத்தினரும் மேற்கொள்ள வேண்டும்.
எனவே நமது மூதூர் பிரதேசத்தின் வறிய நிலை மாறவேண்டும் தமிழ் முஸ்லிம் சிங்களம் வேறு பாடுகள் இன்றி அவர்கள் ஒவ்வொருவரும் படும் துண்பங்களை நேரில் கண்டு அவர்களுக்குக்கான வசதிகள் செய்து தரப்பட்ட வேண்டும். இதை நானும் ஏழையின் வயிற்றில் பிறந்ததால் பசி ஒலுக்குவீடு அடைமழை குளிர் வெள்ளத்தில் பாடசாலைகளில் போய் நிவாரண பொருட்களுக்காக மண்டியிட்டு மணிக்கணக்கில் வேதனபப்படவன் தான் அதனால் ஏழைகளின் வலிகள் என்னவென்று எனக்கு நன்றாகவே தெரியும்.
இந்நிலை மாற வேண்டும் எனவே வீட்டுத்திட்டங்களை செய்து கொடுக்கும் உத்தியோகஸ்தர்கள் கண்களில் இவ்விடயம் தென்பட்டால் அவர்களுக்கு இந்த உதவிகளை செய்து கொடுத்தால் அவர்கள் சிரிப்பில் இறைவன் அன்பை பெறலாம்.
மூதூர் நௌபால்டீன் நற்பணி மன்ற தலைவர்,
நௌபால்டீன்.




