காட்டிக் கொடுப்பவன் அல்ல ஹசன் அலி - பலார் என்று ஒன்று விட்டார்

டந்த ஒருவருடமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் கட்சியின் செயலாளர் நாயகம் ஹசனலி அவர்களுக்கும் இடையில் இடம்பெற்று வந்த பனிப்போர் அண்மையில் நடைபெற்ற கட்சியின் உயர் பீட கூட்டத்தில் தீர்மானிக்கபட்டதற்கினங்க பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான முறையில் முடிவுக்கு வந்தது நாம் அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும்.

இந்த பிரச்சினயை மையமாக வைத்து முஸ்லிம் காங்கிரஸ் எனும் மக்களின் சக்தியினை சில நயவஞ்சக கூட்டம் பிளவடைய செய்யலாம் என குள்ள நரிகள் போன்று கனவு கண்டு வந்தமை பிற்காலப் பகுதியில் நாம் உணர்ந்து கொண்ட உண்ம. இதனாலேயே சில பச்சோந்திகள் ஹசனலி என்கிற ஒரு கதாபாத்திரத்தை வைத்து கட்சிக்கு உள்ளும் வெளியிலும் இருந்து கொண்டு கட்சியை அழித்துவிடலாம் என்று பேராசையுடன் முழு மூச்சாக செயற்பட்டு வந்தனர். இவ்வாறு நினைத்து காய் நகர்த்தியவர்களின் கனவுகள் அத்தனையும் ஒரே நாளில் தவிடு பொடியாகிவிட்டது. இந்த விடயத்தை கேள்வியுற்ற சில குள்ள நரிகள் தற்போதும் ஓய்ந்த பாடில்லாமல் எவ்வாரெனினும் யார் கால் பிடித்தேனும் அவர்களின் சதியினை அரங்கேற்ற வேண்டும் என்பதில் முழு மூச்சாக ஈடுபட்டு கொண்டு இருக்கின்றமை வேதனை அளிக்கின்றது. 

தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களினதும் செயலாளர் நாயகம் ஹசனலி அவர்களினதும் விட்டுக்கொடுப்புடனும் பரஸ்பரம் மனம்விட்டு பேசியதன் வெளிப்பாடே கட்சியின் செயற்பாடுகளில் நேரடியாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் ஒதுங்கி இருந்த செயலாளர் நாயகம் ஹசனலி மீண்டும் கட்சியின் செயற்பாடுகளில் ஈடுபடித்திக்கொள்ள வைத்துள்ளது என்பதில் ஐயமில்லை. இவ்வாறு செயலாளர் நாயகம் மீண்டும் செயற்பாடுகளில் ஈடுப்பட்டுள்ளமை சிலருக்கு வயிற்றில் புளி கரைப்பது போலவே நாம் கருதுகின்றோம். அதனால்தான் அதுவரை செயலாளருக்கு ஆதரவாக இருந்த சில பச்சோந்திகள் தற்போது செயலாளருக்கு எதிராக அறிக்கை விடுகின்றனர். 

செயலாளர் நாயகம் ஹசன் அலி அவர்கள் இன்று (21.12.2016) கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் உள்ள உத்தியோகப்பூர்வ அலுவலகத்தில் தனது கடமைகளை மீண்டும் பொறுப்பெற்றுக்கொண்டமையானது அவரை வைத்து காய் நகர்த்தலாம், இந்த தாய் கட்சியை உரு குலைக்கலாம் அது மூலமாக நாம் வளரலாம் மேலும் கட்சியையும் தலைமையையும் நீதி மன்றில் நிறுத்தலாம் என்று கனவு கண்டவர்களுக்கு ஹசனலி அவர்களால் வழங்கப்பட்ட "பலார்" அடியாகவே அரசியல் விற்பனர்களால் நோக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு சதி செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு வகையான கயவர்களால் சிந்திக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. இது போன்று பலதடவைகளில் சதிகாரர்களின் சதிகளில் இருந்து மீண்டு மீண்டும் புத்துணர்வுடன் வெற்றிநடைபோட்ட வரலாறுகள் நெடுகிலும் நிகழ்ந்து வந்துள்ளதை யாரும் மறந்திட முடியாது. இவர்கள் எம் கட்சியையும், தலைமையும் வீழ்த்த முயற்சிக்கும் ஒவ்வொரு தடவையும் எமது கட்சி பேரியக்கமாக வளர்வதற்கு இவர்கள் இடும் பசளையாகவே நாம் நோக்குகின்றோம் அல்ஹம்துளில்லாஹ். அதன்படி சிறந்த முறையில் வளர்ந்து கொண்டும் வருகின்றது.

இந்த கட்சி மற்றவர்களின் கட்சி போன்று பணத்தினால், பதவியினால் உருவான கட்சி இல்லை மாறாக இந்த கட்சி வளர்வதில் பல தாய்மார்களின் கண்ணீரும் இளைஞர்களின் இரத்தமும் பல போராளிகளின் உயிரும் மூலப்பொருள்களாக அமைந்த கட்சி பல பெண்கள் நோன்பிருந்து இளைஞர்கள் பலர் தங்களின் இளமையை தியாகம் செய்து வளர்த்த கட்சி இது எனவே அவ்வளவு இலகுவாக இந்த மரத்தை அழித்து விடலாம் என்று நினைப்பது அவர்களின் மடமைத்தனம். 

இருதியாக கூறுகின்றோம் நீங்கள் இந்த விருட்சத்தை அழிக்க வேண்டுமாயின் இறுதிப் போராளி வரை நீங்கள் கொன்ற பிற்பாடே சாத்தியம் இது இறைவன் பாதுகாக்கும் கட்சி எனவே உங்களைப் போன்ற பன(ண)ங் காட்டு நரிகளின் சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம் என்பதை கூறிக் கொள்கின்றோம். "அல்லாஹு அக்பர்"
பர்சான் எஸ்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -