மின்சக்தி எரிசக்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ஏறாவூர் அப்துல் மஜீட் மாவத்தையிக்கான மின்சார விஸ்த்தரிப்பு திட்டம் இன்று (21.12) மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வின்போது பாரளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான செய்யித் அலி ஸாஹிர் மௌலானா பிரதம அதிதியாக கலந்துகொண்டு இத்திட்டத்தினை ஆரம்பித்துவைத்தார்.
இந் நிகழ்வின்போது இலங்கை மின்சார சபையின் ஏறாவூர் கிளையின் பொறுப்பதிகாரியான சி.சிவேந்திரன் மற்றும் ஏறாவூர் பிரதேச செயலக பிரதி திட்டமிடல்,பணிப்பாளர் எஸ்.சிவலிங்கம் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.




