அமைச்சர் பாராளுமன்ற இல்லாத போதே சதோச தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டன..!

பாராளுமன்றில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் குழுநிலை விவாதம் இடம்பெற்றிருந்தது. இதன்போது உரையாற்றிய COPE குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹெந்துநெத்து அவர்கள் சதோசா நிறுவனம் பற்றி கேள்வியெழுப்பியும் அது தொடர்பாக இடம்பெற்ற ஊழல் தொடர்பாகவும் பல்வேறு வினாக்களை நாடாளுமன்றில் தொடுத்திருந்தார்.

குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹெந்துநெத்து அவர்களின் வினாக்களானது அமைச்சரவை அங்கீகாரம் இல்லாமல் சதோச நிறுவனத்திற்கு தரம் குன்றிய அரிசியை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பாகவே இருந்தது. 

அமைச்சர் ரிசாத் பதியூதின் அவர்கள் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து அவரின் கீழ் இயங்கும் நிறுவனமானது முன்னைய அராசங்கத்தின் அமைச்சர்களாக இருந்தவர்களை விடவும் சிறப்பாகவும் திறம்படவும் இயங்கிக் கொண்டு வருவதனைக் குறிப்பிட்டுக் கூற முடிகின்றது.

ஆனால் சதோச நிறுவனம் ஆனது சென்ற வருட இறுதியில்தான் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டு அதற்கு பொறுப்பாக அமைச்சர் ரிசாத் பதியுதீனே பொறுப்பாக்ப்பட்டிருந்தார்.

சதோச நிறுவனம் பற்றி எந்தவொரு கேள்விற்கும் பொறுப்புக் கூற வேண்டியவராக அமைச்சர் ரிசாட் பதியூத்தின் அவர்களே இருந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் நேற்றைய தினம் பாராளுமன்றில் சுனில் ஹெந்துநெத்து அவர்களினால் பறைசாட்டப்பட்ட சதோசா நிறுவனம் தொடர்பான கேள்விகளானது சென்ற அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தவர்களுக்காகவே இருந்தது. 

ஆனால் இப்பொழுது சதோசா நிறுவனம் ரிசாட் பதியுதீன் அவர்களின் கீழ் உள்ளது அதற்கெல்லாம் பொறுப்பு விவரணமும் வழங்க வேண்டியதும் கடப்பாடு கொண்டவர் ரிசாட் அவர்கள். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் சுனிலினால் கேள்விகள் கேட்கப்படும் போது குறிப்பிட்ட அமைச்சர் பாராளுமன்றில் இருந்திருக்கவில்லை

பின்னர் அமைச்சர் ரிசாட் பாராளுமன்றம் சமூகமளித்து அவரது ஒவ்வோர் கெள்விக்கும் சபையோரும் விளங்கிக் கொள்ளும் வகையில் கேள்விகளை விளங்கப்படுத்தியிருந்தார். அது மாத்திரமல்லாமல் சதோச நிறுவனத்திற்கு பொருட்களை விநியோகிப்பதற்கு திறந்த கேள்வி ( Open tender) மூலமே வழங்கப்படுகின்றது எனவும் எனவும் தனது உரையில் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குறிப்பிட்ட விடயம் நாடாளுமன்ற உறுப்பினர் சுனிலினால் சிங்கள மொழி மூலமே கேள்விகேட்கப்பட்டது அதனை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியாத சிலர் குறிப்பிட்ட அமைச்சரின் கீழ் ஊழல் இடம்பெற்றதாக உண்மைக்கு புறம்பான செய்திகளைப் பரப்புகின்றனர்.
சம்சுல் ஏ றசீட்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -