இருபது முப்பது வருடங்கள் முன்னால்
எல்லோர் வாழ்விலும் இடம்பிடித்திருந்த்
பிரபல பொருட்கள் பல நூறிருக்கு
ஒரு சிலவற்றை உரைக்கிறேன் இங்கு.
கொனிக்கா கமெரா கொடக்கின் பில்ம் ரோல்
மணிகளை மகிழ்வித்த சீறா ரேடியோ
தனிக்குத் துணையாய் சொணியின் வோக் மேன்
இன்னிக்கு இல்லை எல்லாம் மாறிட்டு.
கேட்டு வாங்கிய கென்வுட் பட டெக்
போட்டு மகிழ்ந்த TDK கெசட் பீஸ்
ஆட்டிப் படைத்த ABBA மியூசிக்
அத்தனையும் இப்போ மாறிப் போச்சு.
CD 50 செல்வாக்கிழந்திட்டு
சிறுவர்கள் ஓட்டிய சொப்பரும் இப்பல்ல
ஓடி மகிழ்ந்த ஹம்பர் சைக்கிளும்
ஒரு சில இடத்தில்தான் உள்ளது இப்போ.
SR புண்ணகை இப்போது இல்லை
எழுதிய ரெனோல்ட் பென் எங்கேயும் இல்லை
கோபால் பற்பொடி 'கோப்பால்' வசனம் போல்
ஒரு சில இடங்களில்
உலவித் திரியுது.
உட்கார வாங்குடன் ஓடிய வண்டி
ஓடும் போது உசிரும் குலுங்கும்
ருக்மணி வண்டியெனும் ரொம்ப பிரபல
ரோட்டு வேன்கள் ஓட்டத்தில் இல்லை
எதுவும் இங்கே இப்படி மறையும்
இன்று இருக்கிற அப்பிளும் சம்சுங்கும்
எதிர் காலத்தில் இல்லாது போகலாம்
இதுவே உலகில் எழுதா நியதி
