எதிர்கால சிந்தனை அமைப்பின் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு..!

ரமணன் -
சுனாமி பேரலை அனர்த்தம் நிகழ்ந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், இவ்வனர்த்தத்தின் வடுக்களைச் சுமந்த மக்கள் இன்னமும் அவ்வலியினை சுமந்துகொண்டே வாழ்வைக் கழிக்கின்றனர். இந்நிலையில் கல்குடா, கல்மடு, வலைவாடி கடலோரக் கிராமத்தில் இன்று (26.12.2016) Future Mind (எதிர்கால சிந்தனை) அமைப்பினால் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு ஒன்று காலை 09.25 மணியளவில் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் இந்து, கிறிஸ்தவ மதகுருக்களும், கோறளைப்பற்று பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஸ்ரீதரன், Future Mind (எதிர்கால சிந்தனை) அமைப்பின் அங்கத்தவர்களும், கிராம அபிவிருத்திச் சங்கத்தினரும், மீனவர் சங்கத்தினரும், உறவுகளை இழந்த குடுப்பத்தினரும் மற்றும் ஏனைய பொதுமக்களும் கலந்துகொண்டனர். 

முதல் நிகழ்வாக அதிதிகளை வரவேற்றதைத் தொடர்ந்து, 2004.12.26 அன்று சுனாமி பேரலையால் காவுகொள்ளப்பட்ட குடும்பதினாரால் நினைவுத்தூபி அருகே வைக்கப்பட்டுள்ள இறந்த ஆத்மாக்களின் உருவப்படங்களுக்கு விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்து, கிறிஸ்தவ குருமார்களினால் ஆத்ம சாந்தி வழிபாடு செய்யப்பட்டு, எதிர்காலத்திலும் இந்த அனர்த்தம் ஏற்படாமலிருக்க பிரார்த்திக்கப்பட்டது. இறுதியாக சுனாமியால் காவுகொள்ளப்பட்டவர்களின் குடும்பத்தினரின் பிள்ளைகளுக்கு Future Mind அமைப்பினரினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -