பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மலபை பகுதியில் வசிக்கும் மூன்று பேர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடுத்த மனுவொன்றை பரிசீலனை செய்த பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மலபை பகுதியில் 2 ஏக்கர் சதுப்பு நிலத்தை முறைப்படி நிரப்பாமல் இராணுவ அதிகாரிகளுக்கான வீட்டு தொகுதியொன்று நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அது பொது மக்களுக்கு பாதிப்பாகும் என குறிப்பிட்டு மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
