தேசிய பௌத்த அறிஞர் சபை ஜனாதிபதி தலைமையில் ஒன்றுகூடியது..!

தேசிய பௌத்த அறிஞர் சபை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்றுகூடியது.

தேசிய பௌத்த அறிஞர் சபை ஐந்தாவது தடவையாக இவ்வாறு ஜனாதிபதி தலைமையில் ஒன்றுகூடி சமய மேம்பாட்டுக்காக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான நான்கு துறைகளில் விரிவாக ஆராய்ந்தது.

பிரிவெனா கல்வி, இளம் துறவியர் நிறுவனம், தேரவாத பௌத்த நிலையத்தை நிறுவுதல், 2017 சர்வதேச வெசாக் பண்டிகை ஆகிய விடயங்களே இதன்போது கலந்தரையாடப்படன.

பிரிவெனா ஆசிரியர்களை பயிற்றுவித்தல் மற்றும் பயிற்சி நிறுவனங்களின் தேவைகள், பிரிவனொ நிர்வாகத்தை சீர்செய்ய வேண்டியதன் அவசியமும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதி அவர்களின் நெறிப்படுத்தலில் பிரிவெனா பணிப்பாளராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் நாபிரித்தன்கடவல ஞானரத்ன தேரர் நியமிக்கப்பட்ட பின்னர் பிரிவெனா கல்வித்துறையில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறுகிய காலத்தினுள் அவரது தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொள்கை மற்றும் நடைமுறைச் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அறிஞர் சபையினர் தேரரை வெகுவாகப் பாராட்டினர்.

பிரிவெனா ஒழுங்கு விதிகள் மற்றும் பிரிவெனா சட்டத்தை மேம்படுத்த வேண்டிய தேவையும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. பௌத்த திரிபீடகத்தை அச்சிடுவதற்காக பதிப்பாசிரியர் மற்றும் ஆலோசனைச் சபையின் தேவையும் அதனை மீள அச்சிடவேண்டியதன் அவசியமும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இளம் துறவியர் நிறுவனம் தொடர்பில் ஆய்வுசெய்து அறிக்கை வழங்குமாறும் புத்த சாசன அமைச்சுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

பெண் துறவியருக்கான கல்வி தொடர்பில் கொள்கையொன்றை வகுப்பதன் முக்கியத்துவமும், பௌத்த கல்வியை கற்பதற்காக வருகைதரும் பிக்குமார்களுக்கு விசா வழங்குவது தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அத்தோடு வெளிநாட்டுப் பிக்குகளின் வதிவிடக் கல்வி மற்றும் அத்துறையை ஒழுங்குபடுத்துவதன் முக்கியத்துவமும் சுட்டிக்காட்டப்பட்டது.

தர்மாசிரியர் பரீட்சையில் சித்தியடைந்தோருக்கு நியமனம் வழங்குதல் தொடர்பாகவும் அதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பிலும் கல்விச் சேவை ஆணைக்குழுவுடன் கலந்துரையாடத் தீர்மானிக்கப்பட்டது.

சர்வதேச தேரவாத பௌத்த நிலையத்தை இலங்கையில் நிறுவுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் பௌத்த நூல்களை ஒழுங்குமுறைப்படுத்தல் சட்டத்தை துரிதப்படுத்தி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் உடன்பாது இக்கூட்டத்தில் எட்டப்பட்டது.

பணிகளில் ஈடுபட்டுள்ள பிக்குமார்களின் கடமைகளை முறைமைப்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன் பிக்குமார்களுக்கு புதிய துறைகளில் பணியாற்றுவதற்கான தேவையும் சுட்டிக்காட்டப்பட்டது. உதாரணமாக பிரதேச செயலக மட்டத்தில் தற்போதுள்ள ஓலைச்சுவடிகள் பௌத்த ஓவியங்கள் போன்றவற்றை சேகரிப்பதன் முக்கியத்துவமும் இதன்போது குறிப்பிடப்பட்டது.

அடுத்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் பண்டிகையின் ஏற்பாட்டுகள் தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. நாயக்க தேரர்களினதும் பௌத்த அறிஞர்களினதும் ஒத்துழைப்பை கூடுதலாக பெறவேண்டிய தேவையும் சுட்டிக்காட்டப்பட்டது.

தேசிய நல்லிணக்கம் தொடர்பில் அனைத்துத் தரப்பினரையும் இணைத்த வட்டமேசை கலந்துரையாடலை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டதுடன் அக்கலந்துரையாடலின் பௌத்த அறிஞர் சபையின் விதந்துரைகளையும் ஆலோசனைகளையும் பெறுவதன் முக்கியத்துவம் தொடர்பில் ஜனாதிபதியினால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -