ஏ.எஸ்.எம்.ஜாவித்-
றவூப் ஸெய்ன் எழுதிய சமகால இலங்கை முஸ்லிம்கள் நூல் வெளியீட்டு விழா கடந்த செவ்வாய்க்கிழமை (29) கட்டார் தூதரகத்தின் ஆய்வாளர் கலாநிதி மஸீஹூத்தீன் இனாமுல்லாஹ் தலைமையில் தபால் திணைக்கள தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஜாமிய்யா நளீமிய்யாவின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி கலந்து கொண்டிருந்தார். இதன்போது வரவேற்புரையை கலாநிதி மஸீஹூத்தீன் இனாமுல்லாஹ் வழங்கியதுடன் நூலின் அறிமுகத்தினை பிஸ்மி குழுமத்தின் தவிசாளர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம்.பிர்தௌஸ் (நளீமி) வழங்கினார்.
இதன்போது நூலின் முதற் பிரதிகளை நூலாசிரியர் றவூப் ஸெய்ன் பிரதம அதிதி கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி, டொக்டர் எஸ்.எல்.எப்.அக்பர், சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ், கலாநிதி மஸீஹூத்தீன் இனாமுல்லாஹ் ஆகியோருக்கு வழங்கி வைத்தார். ஏனைய பிரதிகளை வருகை தந்தவர்கள் பிரமுகர்களிடமிருந்து பெற்றுக் கொண்டதுடன் மூத்த ஊடகவியலாளரும் சிரேஷ்ட அறிவிப்பாளருமான றஷீத் எம் ஹபீழ் றவுப் ஸெயினின் திறமையைப் பாராட்டி நினைவுச் சின்னம் ஒன்றினையும் வழங்கி வைத்தார்.






