நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் மூன்று அக்கரப்பத்தனை தொன்பீல்ட் தமிழ் வித்தியாலயத்திற்கான ஐந்து வகுப்பறைகளை கொண்ட கட்டிடம் ஒன்று நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா பாடசாலையின் அதிபர் சிவஸ்ரீதரன் தலைமையில் 11.12.2016 அன்று நடைபெற்றது.
150 இலட்சம் ரூபா செலவில் இந்த பாடசாலைக்கான புதிய கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக மத்திய மாகாண விவசாயம், தோட்ட உட்கட்டமைப்பு மீன்பிடி, இந்து கலாசார அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரனினால் 11.12.2016 அன்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண சபை உறுப்பினர் பி.சக்திவேல், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.





