ஜம்மியதுல் உலமா சபைக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.இன்று அவ்வமைபின் தலைமையகத்தில் இடன்பெற்ற ஊடக சந்திப்பில் ஜம்மியதுல் உலமா கடிதம் தொடர்பில் ஊடகவியளாலர் அவரிடம் கேள்வி எழுப்பிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர் அவர் கருத்து தெரிவிக்கையில்...
முஸ்லீம்கள் தொடர்பில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் அந்த முஸ்லீம்கள் பின்பற்றும் இஸ்லாம் மார்க்கம் தொடர்பில் எமக்கு பல சந்தேகங்கள் உள்ளன.முஸ்லீம்களின் வாழ்க்கையின் முழு மூச்சி மூச்சு இஸ்லாம் என்பதால் எமக்கு இஸ்லாம் தொடர்பில் இருக்கும் சந்தேகங்கள் தீர்க்கப்படவேண்டும்.முஸ்லீம்கள் ஐந்துவேளை தொழுகிறார்கள் வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாயலில் ஒன்று கூடுகிறார்கள்.அவர்களின் வாழ்க்கையில் இஸ்லாம் மார்க்கமே முக்கிய சிந்தனையாக உள்ளது அதுதான் இங்குள்ள பிரச்சினை.
அல் குரானில் உள்ள சில வசனங்களின் விளக்கங்களையே நாம் உலமா சபையில் கேட்டுள்ளோம்.அந்த வசனங்களால் எதிர்காலத்தில் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது தொடர்பில் எம்மோடு கலந்துரையாடவே நாம் அழைத்துள்ளோம்.
நாம் சுட்டிக்காட்டியுள்ள குரான் வசனங்களை அவர்கள் ஆதரிக்கிறார்களா அல்லது புறக்கணிப்பு செய்கிறார்களா என்பது தொடர்பில் எமக்கு விளக்கமளிக்கவும் நாம் சுட்டிக்காட்டியுள்ள குரான் வசனங்களால் எதிர்காலத்தில் எமக்கு பாதிப்புகள் ஏற்படுமா இல்லையா என்பது தொடர்பில் நாம் விளக்கம் கேட்கிறோம். அதனால் இந்த விடயத்தை நாம் விவாதித்து தீர்த்துக்கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.