கல்முனை எம்.ஐ.சம்சுதீன்-
சாய்ந்தமருதைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் ஐ.எல்.ஏ.அஸீஸ் இரண்டு புதிய இயந்திரங்களை கண்டுபிடித்துள்ளார் இவரின் கண்டுபிடிப்புக்களாக தற்போது குக்கீஸ் மேக்கர் மெசின் மற்றும் மரக்கறி வெட்டும் மெசின் என்பவற்றைக் கண்டுபிடித்துள்ளார்.
இக்கண்டுபிடிப்புக்களானது 12வது கண்டுபிடிப்பாகும்.இதனை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது.இந்நிகழ்வில் முன்னால் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் விதாதா நிலைய விஞ்ஞான தொழிநுட்ப உத்தயோகத்தர் ஐ.எல்.சாக்கீர் உள்ளிட்டோர்கள் பார்வையிட்டு கண்டுபிடிப்பாளர் அஸீஸிக்கு பிரதேச செயலாளர் சலீம் சான்றுப் பத்திரம் வழங்கி வைப்பதை படத்தில் காணலாம்.