இந்தியாவில் புயல் : 500 இலங்கையர்கள் பாதிப்பு

சென்னையை தாக்கிய வர்தா புயல் காரணமாக இலங்கையர்கள் சிலர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையிலிருந்து சென்னை வரையான விமான சேவையை இரத்து செய்ய ஶ்ரீ லங்கன் விமான சேவை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து தம்பதிவ யாத்திரையை மேற்கொண்டு திரும்பியுள்ள இலங்கையர்கள் சுமார் 500 பேர் சென்னை விமான நிலையத்தில் சிக்குண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் தற்போதைய நிலை இலங்கையர்களுக்கு மிகவும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்தாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், புயல் காரணமாக நாளை காலை 7 மணிவரை சென்னை விமான நிலையத்திற்காக விமான சேவையை இரத்துச்செய்ய ஶ்ரீ லங்கன் விமான சேவை தீர்மானித்துள்ளதாக விமான நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -