வர்தா புயல் சென்னை, திருவள்ளூர், கடலுரர் மாவட்ட கடலோர கிராமங்கள் எல்லாம் நீரில் மூழ்கி வருகிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வேறோடு சாய்ந்து விட்டது. பல சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைபட்டது. ஆயிரக்கணகானோர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றபட்டு வருகின்றனர்.
இன்னும் புயல் கரையை கடக்கும் போது, சென்னை நகரமே நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ் சேனல் மட்டும் அல்லாமல் உலக நியூஸ் சேனல்கள் அனைத்தும் இந்த புயல் பாதிப்பு, செய்தியை ஒளிபரப்பு செய்து வருகிறது.
இந்நிலையில் அ.தி.மு.க., கட்சி டி.வி.,யான ஜெயா டி.வி.,யில் மட்டும் தொடர்ந்து சசிகலா தலைமை பொறுப்பு ஏற்க வேண்டும் என கட்சியினர் வலியுறுத்துவதை தொடர்ந்து காட்டி வருகின்றனர். புயல் பற்றிய செய்தி எதுவும் வெளியிடாமல் சசி., புகழ்பாடுவதால் பொதுமக்கள் ஜெயா டி.வி.,மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது.
