அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை - மொறவெவ பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதியில் 38 வயதுடைய ஊமைப்பெண்னொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், பாதிக்கப்பட்ட பெண்னுக்கு 3 இலட்சம் நஷ்டஈடு வழங்குமாறும் 50 ஆயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.பிரேமசங்கர் உத்தரவிட்டார்.
இவ்வாறு தண்டனம் விதிக்கப்ட்டவர் திருகோணமலை-அத்தாபெந்திவெவ பகுதியைச்சேர்ந்த சுஜித் பிரேமரத்ன (30வயது) எனவும் தெரியவருகின்றது.
குறித்த நபர் வீட்டிலிருந்த ஊமைப்பெண்ணை கடந்த 2011-01-18ம் திகதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்தியதாக மொறவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
