ஏறாவூரின் தாழ்நிலப் பகுதிகள் அடிக்கடி மழைக்காலங்களில் வௌளத்தால் பாதிக்கப்படுவதால் அதற்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் முன்வந்துள்ளார்.
தக்வா பள்ளிவாசல் பகுதி.ஷாகிர்மௌலானா வித்தியாலய பகுதி,மிச் நகர் பாடசாலை பகுதி ,மிச் நகர் பள்ளிவாசல் பகுதி மற்றும் ரயில்வே கடவை ஆகிய பகுதிகளில் வசிக்கும் 2500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மழைக்காலங்களில் வீடுகளை விட்டு வெளியேறி அடிக்கடி பொதுஇடங்களில் தங்கவேண்டியுள்ளமை மக்களுக்கு பாரிய நெருக்கடியாக உள்ளமையை தாம் அறிவதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.
கழிவுநீர் அகற்றும் கட்டமைப்பு மற்றும் கழிவு நீர் அகற்றும் கட்டமைப்புக்கள் போதிய அளவில் இன்மையே இதற்கு காரணம் என்பதால் உடனடியாக அதனை நிவர்த்தித்து மக்கள் அடிக்கடி வெ ள்ளத்தால் பாதிக்கப்படகாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதனை ஏற்றுக் கொண்ட இடர் முகாமைத்துவ அமைச்சர் விரைவில் குறித்த பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
இதனடிப்படையில் முதலமைச்சரின் முயற்சியினால் ஏறாவூர் நகரில் வெ ள்ள நீரை வடிந்தோடச் செய்ய 5 மதகுகள் மற்றும் கழிவகற்றும் கட்டமைப்பு ஆகியன 36 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் அதிகம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கும் கழிவு நீர் அகற்றும் கட்டமைப்புக்களை நிர்மாணிக்க கிழக்கு மாகாண முதலமைச்சர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
