பெண்களும் மார்க்கக்கல்வியினை கற்று அதனை போதிக்கின்றவர்களாக மாறியிருக்கின்றனர் -ஷிப்லி பாறுக்

எம்.ரீ.ஹைதர் அலி-
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள அல்-யகீன் பெண்கள் அரபுக்கல்லூரிக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் 2016ஆம் ஆண்டிற்கான பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதிக்கீட்டிலிருந்து 40,000 ரூபா பெறுமதியான தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கல்லூரியின் தலைவர் எம்.எல்.எம். தௌபீக் ஆசிரியர் தலைமையில் (2016.12.2016ஆந்திகதி ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கலந்துகொண்டு தளபாடங்களை வழங்கி வைத்தார். 

இந்நிகழ்வில் உரையாற்றிய பொறியியலாளர் ஷிப்லி பாறுக்...

நாங்கள் இன்று இக்கல்லூரிக்கு வருகைதந்து இக்கல்லூரியின் அமைப்பினை பார்க்கின்றபோது இங்கிருக்கின்ற பெண் பிள்ளைகள் எவ்வளவு தியாகத்திற்கு மத்தியில் மார்க்கக்கல்வியினை கற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என்று பார்க்கும்போது மிகவும் மன வேதனையாக இருந்தது. இருந்தபோதும் பல தியாகங்களின் மத்தியில்தான் வெற்றி இருக்கின்றது என்பதுபோன்று இங்குள்ள இடப்பற்றாக்குறை மற்றும் அதிகளவிலான வெப்பம் என்பவற்றிட்கு மத்தியில் இம்மார்க்கக்கல்வியினை கற்கின்ற உங்களுக்கு அல்லாஹ் நல்லதொரு வெற்றியை தருவான் என்று நான் நம்புகின்றேன்.

அத்தோடு, இன்ஷாஅல்லாஹ் எதிர்காலத்தில் இக்கல்லூரிக்கு தேவைப்பாடாகவுள்ள விடயங்களை எங்களாலான முயற்சிகளை மேற்கொண்டு பெற்றுத்தருவதற்கு அல்லாஹ் எங்களுக்கு உதவி செய்யவேண்டும். ஒரு காலத்தில் ஆண்கள் மாத்திரம்தான் மார்க்கக்கல்வியினை கற்றவர்களாகவும் போதிக்கின்றவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் இப்போதுள்ள நிலையில் பெண்களும் மார்க்கக்கல்வியினை கற்று அதனை போதிக்கின்றவர்களாகவும் மாறி இருக்கின்றபோது எதிர்கால சமூகம் நல்ல மார்க்க விழுமியங்களைக்கொண்ட சமூகமாக மாரும் என்பதில் எவ்விதமான சந்கேகமும் கிடையாது.

மேலும், இக்கல்லூரியில் குர்ஆனை மனனம் செய்யக்கூடியவர்களாக நூற்றுக்கு மேற்பட்டவர்களும், கிதாபு பிரிவில் நூற்றி நான்கு பேரும் மார்க்கக்கல்வியினை கற்பவர்களாக இருக்கின்றீர்கள். எதிர்காலத்தில் எம்சமூகத்தை நல்வழி படுத்துபவர்களாக நீங்கள் அனைவரும் திகல வேண்டும். அதற்கு எங்களால் என்னென்ன உதவிகளை தனிப்பட்ட ரீதியாகவோ அல்லது அரசாங்க ரீதியாகவோ நாங்கள் பெற்றுத்தருவதற்கு நாங்கள் முன்னெடுக்கின்ற விடயங்கள் வெற்றியளிப்பதற்கு நீங்கள் அனைவரும் எங்களுக்காக அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்க வேண்டும்.

இப்பிரதேசத்தைப்பொருத்த மட்டில் இவ்வாறானதொரு அரபுக்கல்லூரி ஒன்றினை உருவாக்கு எமது மார்க்கக்கல்வியினை போதிக்கின்ற விடயமானது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாக அமைந்துள்ளதோடு, சரியான நெறிமுறையில் எமது மார்க்கக்கல்வியினை அனைவரும் பின்பற்றி வாழக்கூடியவர்களாக நாங்கள் அனைவரும் மாற வேண்டுமென தனதுரையில் கேட்டுக்கொண்டார். 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக், மீராவோடை மீராஜூம்ஆ பள்ளிவாசல் தலைவரும், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கே.பீ.எஸ். ஹமீட், கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் எம்.ரீ. ஹைதர் அலி, அல்-யகீன் அரபுக்கல்லூரியின் நிருவாகிகள் மற்றும் விரிவுரையாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -