சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான வார்தா புயல் சென்னைக்கு அருகே தமிழகத்தின் வடமாவட்டத்திற்கும் ஆந்திர மாநிலம் வடக்கு பகுதிக்கும் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், புயலின் ஒரு பகுதி 2.30 மணியில் கரையை கடந்தது. அப்பொழுது மணிக்கு 140 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதனை அடுத்து பலத்த மழையும் பெய்தது.
இதனால் சாலைகள், வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என பல இடங்களில் மரங்கள் விழுந்தன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கனமழையினால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.
இந்நிலையில், வார்தா புயல் மற்றும் பலத்த மழையினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். அதன்படி, பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தொகை வழங்கப்படும்.
புயல் மற்றும் மழையினால் நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் 100 நடமாடும் மருத்துவ குழுக்கள் மற்றும் 50 தொற்று நோய் தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புயல் பாதித்த 3 மாவட்டங்களில் 6 அமைச்சர்கள் மேற்பார்வை செய்கின்றனர். 3 மாவட்டங்களில் 113 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. ஒரு சில இடங்களில் மின் விநியோகம் சீரடைய ஓரிரு நாட்கள் ஆகும். மின் விநியோக சீரமைப்பு பணியில் 4 ஆயிரம் களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -