மாஞ்சோலை கிராம முஸ்லிம்களின் பூர்வீகத்தினை உறுதிப்படுத்தும் மஹ்மூட் ஹாஜியின் வீடமைப்பு திட்டம்

ஓட்டமாவடி இர்ஷாட்-
ட்டமாவடி மாஞ்சோலை கிராமத்தில் கட்டார் நாட்டு தனவந்தர்களின் முழுமையான உதவியினை பெற்று மேர்சி லங்கா நிறுவனம் மற்றும் கல்குடா இஷ்றா அமைப்பினூடாக சகல வசதிகளையும் கொண்ட 60 வீடுகளை புதிதாக இஸ்லாத்தினை ஏற்றவர்களுக்கும் அடிப்படை வசதிகள் இன்றி பிரதேசத்தில் வசித்து வந்த குடும்பங்களுக்கும் மீராவோடை ஜும்மா பள்ளிவாயலின் முன்னாள் நம்பிக்கையாளர் சபை தலைவர் மஹ்மூட் ஹாஜி வழங்கி வைத்துள்ளமையானது கல்குடா பிரதேசத்தில் பெரிதும் வரவேற்கத்தக்க விடயமாக பார்க்கப்படுகின்றது.

இருந்தும் பக்க சார்பான முறையில் குறித்த வீடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் மஹ்மூட் ஹாஜி குறித்த வீட்டு திட்டத்தில் சுய இலாபம் அடைந்ததாகவும், என பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்ற மஹ்மூட் ஹாஜியினை நேரடியாக சந்தித்து வினவிய பொழுது அவர் எமக்களித்த பதில்களுடனான காணொளி எமது இணைய நாளிதல் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், குறித்த வீடமைப்பு திட்டத்தினை அமைப்பதற்காக காணி தேவைப்பட்ட சமயத்தில் தனியார் காணியினை அரச காணி என்று மக்கள் குடியேறி குடிசைகளை அமைத்து வாழ்ந்து வந்த சந்தர்ப்பத்தில் காணியின் சொந்தக்காரர் 2007ம் ஆண்டு தொடக்கம் நீதி மன்றில் வழக்குகளை தொடுத்திருந்தார். அவ்வழக்குகளை சமாதான முறையில் பேசி முடித்து காணிக்குரிய தொகையினை தனது சொந்த நிதியிலிருந்து காணி உரிமையாளருக்கு கொடுத்து வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து அக்காணிகளில் வாழ்ந்த ஏழை மக்களுக்கு ஒரு சிறிய தொகையையும் பெற்று காணிகளையும் வாழ்ந்து வந்த ஏழை மக்களிடம் கையளித்திருந்தார்.

அதற்கு பிற்பாடே குறித்த கட்டார் நாட்டு தனவந்தர்கள் மேர்சி லங்கா நிறுவனம் மற்றும் கல்குடா இஷ்றா அமைப்பினூடாக மஹ்மூட் ஹாஜியினை தொடர்பு கொண்டு 60 விடுகளையும் பக்ர் வீடமைப்பு கிராமம் என்ற பெயரில் சகல வசதிகளுடனான ஒவ்வொரு வீடும் ஏழு இலட்சம் பெறுமதியுடன் புதிதாக இஸ்லாத்தினை தழுவியவர்களுக்கு 20 வீடுகளும் குறித்த காணிகளில் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்த ஏழைகளுக்கு 40 வீடுகளுமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.

மேலும் அக்கிராமத்தின் பிரச்சனையாக நீண்ட நாட்கள் நிலவிய எல்லை நிர்ணய பிரச்சனையானது மஹ்மூட் ஹாஜியின் பெரும் பங்களிப்புடனும் அர்ப்பணிப்புடனும் குறித்த வீடமைப்பு திட்டத்துடன் நிறைவிற்கு வந்தது. அத்துடன் குறித்த வீடமைப்பு திட்டத்தினை சட்டரீதியாக அமைப்பதற்காக அரச நிருவாகத்தின் அனுமதியினை பெற்றுக்கொள்ளும் நகர்வுகளில் கல்குடா பிரதேசத்தினை பிரதி நிதித்துவப்படுத்தும் பிரதி எம்.எஸ்.எஸ்.அமைச்சர் அமீர் அலியின் பெரும் பங்கு இருந்தது என்பதும் முக்கிய விடயமாகும்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -