கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்களின் ஏற்பாட்டில் 31.10.2016 (திங்கள்) புல்மோட்டை பிரதேச மற்றும் குச்சவெளி பாடசாலைகளின் அதிபர்களும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களில் சிலரும் பிரதேச பாடசாலைகள் புல்மோட்டை, புடவைக்கட்டு, குச்சவெளி, இறக்கக்கண்டி, மூதூர், கிண்ணியா, வெள்ளைமணல், முள்ளிப்பொத்தானை, தோப்பூர் போன்ற பாடசாலைகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
குறித்த பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை நியமித்து தருவதாக கெளரவ கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி மற்றும் அமைச்சின் செயலாளர் அசங்க ஆகியோரால் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
குறித்த கல்வியல் கல்லூரி மற்றும் தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களை உள்ளடக்கி நியமிப்பதாக வாக்குறுதி அளித்தார்.